பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

உலகைத் திருத்திய

பின்வாங்கியபோது உற்சாகமூட்டி வெற்றி கண்டசுத்த வீரன் சாக்ரடிஸ்.

நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் பேசிய பேச்சுக்கள் இறவா நிலைபெற்றவை. அவற்றை அப்படியே இங்கே குறிப்பிட வேண்டுமென்றால் இயலாது. அதன் சுருக்கத்தை, முக்கியமான பகுதிகளை மட்டும் பார்ப்போம்.

“எழில் கொழிக்கும் ஏதென்ஸ் நகர நீதிமான்களே! இந்த என்னுடைய எழுபத்திரண்டாவது வயதில் முதன்முதலாக இப்போதுதான் நான் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறேன். பழக்கமில்லாத காரணத்தால் நான் ஏதாவது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டால் நீதிமன்றத்தில் இது வரை நிற்காத ஒரு ஏழை, அதுவும் பழக்கமில்லாதவன் என்ற காரணத்தால், என்னை உங்கள் காருண்ய உள்ளத்தால் மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

என் குழந்தைப் பருவம் முதல் இந்த என் வயோதிகப் பருவம்வரை பார்த்தால், நான் வாழ்ந்த இந்த எழுபத்திரண்டு ஆண்டுகள் மிகப்பெரிய காலமாகும். ஆனால் நித்திய தத்துவத்தோடும், அழிவில்லாத காலத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது காலவேகத்தில் அடித்துக்கொண்டு போகும் அணுவுக்குள் அணு என் வாழ்நாள்.

நான் என் தத்துவத்தை மக்களிடையே சொல்ல ஆரம்பிக்கும்போது இங்கே நீதிமான்களாக வீற்றிருக்கும் உங்களில் மிகப்பலர் சிறுபிள்ளைகளாக இருந்தீர்கள். என்றாலும், அந்த ஒரு காரணத்திற்காகவே இந்தக் குற்றமற்றவனுக்கு நீதி வழங்கும் பெருமைக்குரிய மக்களாக வீற்றிருக்கும் உங்களை நான் அவமதிக்கமாட்டேன். நான் அப்படி செய்வேனானால், என் தாய் நாட்டின் சட்டத்தையும், நீதியையும் அவமதித்தவனாவேன்.

நான் தவறுடையவனா இல்லையா என்று நிரூபிக்கப்பட்டால் அதனால் வரும் தண்டனை, அல்லது மன்னிப்பு ஆகியவைகளுக்கு நானே நேரடியான பொறுப்பாளி, என்மேல்