பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 உலகைத் திருத்திய

ருென்றிருந்து அதனை நாம் உணர்ந்தாலும், பிறர்க்கு அதைத் தெரிவிப்பது இயலாத காரியம்.’’ என்று அறிஞர் ஜார்ஜியாஸ் என்பவர் வெளியிட்ட கருத்துக்களே இதற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்கிறேன். மேலும், “தெய்வங்கள் உண்டென் பதும் தெய்வத்தின் குணம், ஆற்றல் முதலியன இவை என்பதும், நாம் ஒரு முடிவாகக் கூறக்கூடியதல்ல. நமது வாழ் நாள் அதற்குப் போதாது. மனிதனின் ஐம்புல உணர்ச்சிக்கும் மனதிற்கும் எட்டாத பொருள்களே உலகிலில்லை.” என்று பித கோரஸ் என்ற ஆதிதத்துவ ஞானி உரைத்ததையும் உங்க ளுக்கு நினைவு படுத்தவிரும்புகிறேன்.

மக்களுக்கு விருப்பமானதைச் சொல்லி நான் பெருமை யடையவோ, வெறுப்பானதைச் சொல்லி சிறுமையடையவோ எண்ணவில்லை. நான் அப்படி செய்தால் மிருகங்களைப் பழக்குபவனுக் கொப்பாவேன். ஏனெனில், மிருகங்களுக்கு வெறுப்பானதைச் செய்தால் தன்னைக் கொன்றுவிடும். என்று பயந்து, அவைகளுக்கு உவப்பானதையே செய்து உயிர் வாழ எண்ணும் ஒரு காட்டு மனிதனுக்கு ஒப்பாவேன். மேலும் அந்த முறையைக் கையாண்டால் பகுத்தறிவு உள்ள மக்களை மிருகங் களாக்குகிறேன் என்று என் மனமே என்னை வாட்டுகிறது.

ஒரு நண்பன் என்னிடம், நேர்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினன். நேர்மை என்றால் என்ன என்று அவனைக் கேட்டேன். வாங்கியதைத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அதுதான் நேர்மை என்றான். அப்படியாளுல் ஒருவன் நல்ல சுபாவத்தோடு இருக்கும்போது ஒரு கூரிய வாளை நம்மிடம் கொடுத்துவைத்தான் என்று வைத்துக்கொள்வோம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் பைத்தியம் பிடித்தலளுய் விட்டான். அப்படி பைத்தியமாய்விட்ட அவன், நம்மிடம் வந்து முன்பு அவன் நம்மிடம் கொடுத்த வாளைத் திருப்பித் தரும்படி கேட்டால் கொடுத்து விடலாமா? அதுதான் நேர்மையா? என்று கேட்டேன். நண்பன் ஒன்றும் பேசாமல் திரும்பிவிட்டான். அது மாத்திரமல்ல, அன்றுமுதல் அவன் என் மோசமான எதிரியாகவும் மாறிவிட்டான்.