பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் I49

அடுத்து ஒருவன் வந்தான். நீதி, நட்பு இவை என்ன வென்று கேட்டேன். இரண்டும் ஒன்றுதான் என்றான். இல்லை என்றேன். தம்பி கொலைகாரன், அண்ணன் நீதிபதி, நீதிபதி யாக இருக்கும் நீதிமன்றத்திலேயே தம்பி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு குற்றக் கூண்டிலே நிற்கிருன். அந்த நீதிபதிகுற்றவாளி தம்பி என்பதற்காக உறவைப் பார்ப்பதா? குற்றவாளி தன் சொந்தத் தம்பியாயிருந்தாலும் நீதியை நிலை நாட்டுவதா? ஆகையால் நீதியும் நட்பும் ஒன்றல்ல என்றேன். அதுமுதல் அந்த நண்பன் எதிரியாகிவிட்டான்.

மூன்றாவதாக ஒருவன் வந்தான். அவனிடம் அழகு என்றால் என்ன என்று கேட்டேன். பார்ப்பதற்கு அழகாக கவர்ச்சியாக இருப்பது அழகு என்றான். உடலைப்பற்றிச் சொல் கிறீரா-உள்ளத்தைப் பற்றிச் சொல்கிறீரா என்று கேட்டேன். உடலைப் பற்றித்தான் என்றான். நாம் திருமணம் செய்து கொள்ளும் போது மனைவி அழகாயிருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு ஏதோ ஒரு விபத்தில் சிக்கி முகமெல்லாம் கருகருத்து அங்கஈனமாய் விட்டாள் என்று வைத்துக்கொள்வோம். அப் போது கணவன் அவளைக் கவனிக்காமலிருக்க முடியுமா? உடல் அழகுபோனலும் உள்ளத்தின் அழகு இருக்குமே, இதைக் கொண்டு ஆறுதல் அடையலாமல்லவா? ஆகையால் உடல் அழகைவிட உள்ளத்தின் அழகைக் கண்டோமானல் இந்தச் சிக்கலுக்கே இடமில்லை என்றேன். இதை ஒப்புக்கொள்வதும் இல்லாததும் அவன் விருப்பம்தான் என்றாலும் அவனும் பகை யாகிவிட்டான். இப்படி வீனக நாற்பதாண்டுகளாக மக்களைத் திருத்தவேண்டுமென்று எண்ணித்தான் என் சொந்தவாழ்வை சுருக்கிவிட்டு பொதுநலத்திற்காகச் சுற்றிவருகிறேன்.

நான் எப்போதும் யாருக்கும் ஆசிரியனுக இருந்து போதித்ததில்லை. என்னை யாரும் குருவெனக் கொண்டாடியது மில்லை. எனக்கென்று ஒரு சங்கமோ அமைப்போ இல்லை. என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதன் எதிரொலி தான் மக்களின் உள்ளத்தில் ஒலித்தது.