பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 உலகைத் திருத்திய

என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் தர்க்க வாதத்தை மீண்டும் என் உயிர் உள்ளவும் செய்தே திருவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

உண்மையில் எனக்கு அறிவில்லை. மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் உணரவில்லை. நான் என் அறிவீனத்தை உணர்ந்தேன். அவ்வளவுதான் வேற்றுமை,

நான் சாவிற்கு அஞ்சவில்லை. அநீதிக்குத்தான் அஞ்சு கிறேன். எனக்கும் உங்களுக்கும் பொதுவாக இருக்கும் ஆண்டவன் பேரால் நீதி கேட்கிறேன்.”

அந்தத் தள்ளாத வயதினன் தன் வாதத்தைச் சொல்லி முடித்தான்.

பயங்கரத் தீர்ப்பு

மரணம்-மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப் பட்டிருக்கின்றன. நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501 பேர் தங்கள் வாக்குகளைப் (ஒட்) பதிவு செய்கின்றனர். எந்தப் பெட்டியின் அருகில் ஆட்கள் அதிகமாகக் கூடுகின்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஏறக்குறையச் சமமாகவே தெரி கின்றது. என்ன ஆகுமோ என்ற ஆவலோடு நீதிமன்றத்தின் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். அறிஞன் வாழ்வில் பற்றுக் கொண்டவர்கள் வாடிய முகத்தோடும், தாழ்வில் பெருமை கொண்டவர்கள் தன்னடக்கமில்லாமல் ஆரவாரம் செய்துகொண்டும் இருந்தனர். ஒழிந்தான் சாக் ரடீஸ்’ என்று எக்காளமிடுவோரும், அவர்களை நெரித்த புருவத்தோடு பார்க்கும் நியாய சிந்தையிலிருப்போருமாக, பெரிய பரபரப்புக்கிடையே அனைவருடைய வாக்குகளும் பதிவாய்விட்டன. அவை எண்ணப்பட்டன. (220 பேர்கள் சாக்ரடீசை மன்னித்துவிட வேண்டுமென்றும். 281 பேர்கள் மரண தண்டனையளிக்க வேண்டுமென்றும் தங்கள் வாக்குகளை வழங்கியிருந்தனர்.) 61 ஓட்டுகள் அறிஞரின் உயிரைக் குடிக்க முன்வந்துவிட்டன. ஒரு பக்கம் எக்காளம். மற்றாேர் பக்கம் ஏக்கம். கருத்துள்ளோர் கவலைக் கண்ணிர் சொரிந்தனர். அடக்கமற்ற அநியாயக்காரர்கள் ஆனந்தக் கண்ணிர் சொரித்