பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் - 151

தனர். பெருமூச்சுக்கிடையே பெட்டிகளைத் தூக்கிச்சென்றனர் பணியாட்கள். -

அவன்பால் அன்புள்ளம் கொண்டவர்கள் அனைவருமே, அவன் மன்னிப்புக்காக வாக்களித்தவர்கள். ஆனல் அவர்கள் தோல்வியுற்றனர். அதில் கு றிப்பிடவேண்டியவன் பிளாட்டோ உலக மேதை, வாதகேசரி, அறிவின் வற்றாத ஊற்று. சொற் செல்வன் சாக்ரடீஸ்மேல் வழக்குத் தொடுத்த மெலிட்டஸ் என்ற மாபாதகன் அவனுக்கு விரோதியாகத் தோன்றவில்லை. 6. ஒட்டுக்களில், 31 ஒட்டுக்களைத்தான் மூர்க்கத்தனமான எதிரிகளாகக் கருதினன். ஏனென்றால், 31 ஒட்டுகள், இதுவரை சாதகமாகக் கிடைத்த 220 ஒட்டுக்களோடு சேர்த்திருந்தால் மொத்தம் 25 ஒட்டுகள் ஆகி இருக்கும். சிந்தனையாளன் தப்பி யிருப்பான். அநீதிக்கே வன்மையதிகம். நல்லவன் அவமதிக் கபப்படுவதும், நயவஞ்சகன் நாட்டாண்மை கொள்வதும் நானிலத்தில் என்றுதான் மாறுமோ?

“சாக்ரடீசுக்கு மரண தண்டனை” என்றவுடன், அதுவரை அப்பேரறிஞனுடைய அறிவாற்றலை அ றிந்து கொள்ளாமல், சதா அவனோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த மனைவி சாந்திபே, இடியைக் கேட்ட அரவம் போலானள். சுற்றத்தார் சோகமுற்றனர். மக்கள் மூவரில் இருவர் மனம்வெம்பி வாய் விட்டுக் கோவெனக் கதறினர். மற்றாெருவன் கைக்குழந்தை. தாயின் கண்ணிரைத் தன் மலர்க்கரத்தால் தடவியது. அறிவிப்பு |

“உனக்கு மரண தண்டளையளிக்க வேண்டுமென்று நீதியின் பிரதிநிதிகள் தங்கள் அதிகப்படியான வாக்குகளால் அறிவித்து விட்டனர். சாக்ரடீஸ், மரணத்திலிருந்து நீ தப்புவதற்கு மார்க்கமில்லை. இறுதியாக நீ ஏதாவது சொல்லிக் கொள்வதா யிருந்தால், அல்லது உன் தண்டனையில் நீ ஏதாவது மாற்றம் விரும்பினால், அதை உனக்கு ஏற்கனவே அளித்திருக்கும் பரிபூரண சுயஉரிமைப்படி நீ கேட்டுக்கொள்ளலாம். இது நீதிமன்றத்தார் அறிவிப்பு. r