பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 உலகைத் திருத்திய

இறுதி எச்சரிக்கை

“நீதிதிமான்களே! நீங்கள் எனக்களித்த விடுதலைக்காக நான் நன்றி செலுத்துகின்றேன். எனக்கு இந்தத் தீர்ப்பை யளிக்க நீங்கள் அதிக நேரத்தை வீணுக்கவில்லை. ஆளுல் எனக்கு மரண தண்டனையளித்ததின் மூலம் நகரத்தின் நன்மை யில் நாட்டங் கொண்டுள்ள பலருடைய பழிச்சொல்லுக்கு ஆளாய்விட்டீர்கள். நான் அறிஞளுயிருந்தாலும் இல்லாவிட் டாலும் என்னை அவர்கள் என் இறப்புக்குப்பின் அறிஞன் என்று ஒப்புக்கொள்வது திண்ணம்.

நான், உங்களிடத்திலே அகப்பட்டுக் கொண்டிருக்கும் என் உயிரைக் கேட்கவில்லை, நீதியையே வேண்டுகிறேன்.

தவறு செய்த ஒருவன், அதை மறக்கக் கண்ணிரும் கதறலுமாக் நீதி மன்றத்தில் நிற்க வேண்டிய பழக்கத்துக்கு மாருக, நான் ஒரு புது மாதிரியிலே நின்றேன் என்பதால்,நான் உங்களிடம் என் வாதத்தைப்பற்றிச் சொல்விக் கொண்டிருந்த போது, மனிதத்தன்மையல்லாத ஒன்றுக்காக வாதாட வேண்டுமென்று நினைத்து, அதல்ை வரப்போகும் ஆபத்தை யும் எண்ணுமல் தைரியமாக நின்றேனே. அதையேதான் இப்போதும் செய்ய நினைக்கின்றேன்.

நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ளவும், நீங்கள் உங்கள் நீதியை நிலைநாட்டவும் எடுத்துக்கொண்ட முயற்சியில், நீதியை நிலை நாட்டிவிட்டதாக எண்ணி நீங்கள் தற்காலிக வெற்றி பெற்றுவிட்டீர்கள். மனக் கசப்புக்கும் மாளாத சூழ்ச்சிக்கும் இடையே வாழ்வதைவிட மறிப்பதே மேல். ஆகவே நான் சுத்த வீரன் என்ற முறையில் என் உயிரையே உங்கள் வெற்றிக்காகப் பரிசளிக்கின்றேன். -

என் அருமை நண்பர்களே! ஏதன்ஸ் நகரப் பெருமக்களே! என்றாவது ஓர் நாள் இந்த நீதியின் நெடும் பயணத்தை நியாய சிந்தனையுள்ளவர்கள் அளந்து பார்த்துவிடுவார்கள். அதுவரை இந்த சாக்ரடீஸ் உயிரோடிருக்கப் போவதில்லை. அதற்குள் அகில முழுதும் அழிந்துவிடப் போவதில்லை. சாக்ரடிஸ் சாச