பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 உலகைத் திருத்திய

உண்மையிலேயே நீதி வழங்கும் மைனஸ் , ராடமாந்தஸ், டிரிப்டோலெமஸ் போன்றவர்களும் மற்றத் தெய்வப்பிறவி களும் இருக்கிறார்கள். அங்கே போவது நல்லதுதான். மேலும் அங்கே ஆர்க்மிடிஸ், மியு ஆயஸ், ஹெலியாட், ஹோமர் ஆகிய வர்களோடு அளவளாவுவதென்றால் எதையும் கொடுக்கலாமே. அது உண்மையாக இருந்தால் நான் மீண்டும் மீண்டும் சாகத் தயார். அங்கே பாலமீடஸ், டெல்மான் மகன் அஜாக்ஸ் இன்னும் அநீதி காரணமாக மடிந்த பழைய வீரர்கள் எவர் களிருந்தாலும் அவர்களைக் கண்டு பேசுவது எவ்வளவு இன்ப மாக இருக்கும் தெரியுமா?

இவ்வாறு சாக்ரடீஸ் கூறியதைக் கேட்டு, சபையோர்கள், உயிரையும், தங்களையும், நீதி மன்றத்தையும் துச்சமென மதித் தான் என்று தவருக நினைத்துக்கொண்டு, மரண தண்டனையை மீண்டுமோர் முறை உறுதிப்படுத்தி விட்டார்கள்.

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டிய விதம் விஷங் கொடுக்கக் கொல்லவேண்டும் என்றும், அதுவும் இப்போது நகரத்தில் விழாவொன்று நடந்து கொண்டிருப்பதால் அதை முன்னிட்டு டிலோசுக்குச் சென்ற கப்பல் திரும்பி வந்ததும், அதாவது இன்றைக்குச் சரியாக 30-ஆவது நாள் விழா.முடிந்து கப்பல் வந்து சேர்ந்ததும், அதற்கடுத்த நாள் மாலை 6மணிக்குச் சாக்ரடீசுக்கு விஷங் கொடுத்துவிடவேண்டுமென்றும் அது வரையில் குற்றவாளி தப்பித்தோடாமல் தற்காப்புக்காக காலில் விலங்கிட்டுச் சிறையில் காவலில் வைக்கவேண்டு’ மென்றும் நீதி மன்றம் தனது முடிவான தீர்ப்பை அறிவித்து விட்டது.

உள்நாட்டில் குழப்பஞ் செய்துகொண்டிருப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல நேர்ந்தால், அங்கே அவர்களையு மறியாமல் ஓர் ஒற்றுமையுண்டாவதைப் போலச் சாக்ரடீசின் கொள்கை பிடிக்காதவர்கள் கூட, சிறையிலே நட்புக்கொள்ள ஆரம்பித்தனர்-நாள் நெருங்க நெருங்க நண்பர்களின் துக்க மும் நெருங்க ஆரம்பித்தது. நகரப் பொது மாளிகையில்