பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 . உலகைத் திருத்திய

துக்க ரேகைகள் முகத்தில் தோன்றாமல் அயர்ந்து துரங்கிக் கொண்டிருக்கின்றான் சாக்ரடிஸ். அவனே விழிக்கட்டும் என்று எழுப்பாமல் பக்கத்தில் சந்தடியின்றி அமர்ந்துவிட்டான் இரீடோ.

எழுந்த சாக்ரடீஸ் இவ்வளவு இருட்டில் ஏன் வந்தாய்? என்று கேட்டதற்கு கிரீடோ மெளனம் சாதிக்கிருன்.

சாக்ரடீஸ் : இப்பொது என்ன நேரமிருக்கும்? கிரிடோ: பொழுது புலரும் நேரம்.

சாக்ரடீஸ் : இவ்வளவு சிக்கிரமாகச் சிறைக்காப்போன் உன்னை அனுப்பியதற்காக வியப்படைகிறேன்.

கிரீடோ : அவன் எனக்கு நன்றாகத் தெரிந்தவன்; அவனுக்கு பல உதவிகள் செய்திருக்கின்றேன். . சாக்ரடீஸ் : நெடு நேரமாகக் காத்துக்கொண்டிருக்

கின்றாயா? - -

கிரீடோ : இல்லை, கொஞ்ச நேரமாக. சாக்ரடீஸ் : அப்படியால்ை ஏன் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கின்றாய்? ஏன் என்ன எழுப்பக்கூடாது?

கிரீடோ: உண்மைதான். நான் கொண்ட வருத்தத்தின் காரணமாக எனக்குத் தூக்கம் வரவில்லை. ஆளுல் தாங்கள் ஆனந்தமாகத் துரங்குகின்றீர்கள். உங்களுடைய இந்த அருமை யான துக்கத்தைக் கலைக்கக் கூடாது என்று விரும்பினேன். உங்கள் வாழ்நாள் முழுதுமே நீங்கள் சந்தோஷமாக இருக் கின்றீர்கள் என்பதை நான் பல முறை பார்த்திருக்கின்றேன். ஆனால், நீங்கள் இன்று கொண்டிருக்கின்ற மகிழ்ச்சியை காணும்போது அவையெல்லாம் பின் தங்கிப் போய்விடு. கின்றன. இப்போது வந்திருக்கும் பேராபத்தை எவ்வளவு புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். -

சாக்ரடீஸ் : இல்லை கிரீடோ. இந்த தள்ளாத வயதில் நான் சாகப் பயப்படுவது மிகக் கொடுமை.