பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் : - I57

கிரீடோ : உண்மைதான். இதைவிடக் குறைந்த இம்சை களை அனுபவித்தவர்களெல்லாம் விதியை வெறுத்து ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிரு.ர்கள்.

சாக்ரடிஸ் : போகட்டும் எதற்காக இங்கே வந்தாய்? கிரீடோ : நாளே மாலே உங்கள் முடிவு......

சாக்ரடீஸ் : ஏன் விழா முடிந்து டிலேசிலிருந்து கப்பல் வந்துவிட்டதா?

கிரீடோ : இல்லை, இன்னும் வரவில்லை. இன்று நிச்சயம் வந்துவிடும். அது வந்த மறுநாள்தானே உங்கள் கடைசி நாள். நாளை நீங்கள் முடிந்துவிடப் போகின்றீர்கள்.

சாக்ரடீஸ் : முடியட்டும் ஆனல் கப்பல் இன்று வராது.

கிரீடோ : ஏன் அப்படிச் சொல்லுகின்றீர்கள்?

சாக்ரடீஸ் : கப்பல் வந்து சேர்ந்த அடுத்த நாளே நான் இறக்கவேண்டும் அல்லவா? -

கிரீடோ : ஆம். அதிகாரிகளும் நீதி மன்றத்தார்களும் அப்படித்தான் சொன்னர்கள். -

சாக்ரடீஸ் : இல்லை. இன்றைய மூன்றாம் நாள்தான் நான் இறப்பேன். இது என் மனம் எனக்களித்த கட்டளை.

கிரீடோ : என் அருமை நண்பனே! கடைசி முறையாக

வேண்டுகிறேன். நீங்கள் எப்படியும் தப்பித்துக்கொள்ள வேண்டும். உங்கள் பிரிவினல் மீண்டும் பெறமுடியாத ஒர் அருமையான நண்பனே தத்துவ ஞானியை உலகமே இழந்து விடும். வருங்கால தலைமுறையினர் இழந்துவிடுவர். ஏன்? கிரேக்க நாடே இழந்துவிடும். நான் உங்களைக் காப்பாற்ற முயன்றேன் என்பதை உலகம் நம்பாது. ... - .

சாக்ரடீஸ் : நாம் ஏன் உலகத்தின் கருத்துக்களுக்கு காத்துக் கொண்டிருக்கவேண்டும்? நாம் எது சரியென்று நினைத் ,ே தாமோ அதையே செய்கிருேம். மருத்துவன் நோயாளியின்