பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள் 165

நாமறிந்த மட்டில் உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள் மிகச் , சிலரில் தலை சிறந்தவன் சாக்ரடீஸ். செடியில் மலர்ந்த மலர் கொய்வாரின்றி உதிர்ந்து உலர்ந்துவிடும் தன்மைப் போன்ற தல்ல சாக்ரடீஸ் உயிர். அவனுடைய ஒரே உயிர் எத்தனையோ உயிர்களை மேம்பாடடையச் செய்திருக்கிறது. அந்த மேன் மக்களை இனி காலந்தான் காப்பாற்றவேண்டும். இறந்தவன் மேல் ஆணையாக அவன் விட்டுச் சென்ற அறிவாலயத்தைக் காப்போமாக. அவன் பொன்னடிகளைப் போற்றுவோமாக!!

        வாழ்க சாக்ரடீஸ்! 
       வளர்க அறிவாலயம்!!


              *