பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள் 167

தாலும் நாம் அரேபியா என்றே சொல்லிக்கொண்டுபோவோம் இதில் நாம் அரேபியா என்ற நாட்டை பற்றி தனியாக எழுதியிருப்பதால், இதில் நபிகள் பிறந்த மெக்கா நகரம், அவர் முதன்முதல் மஜீத் கட்டிய மெடினா நகரம், அவர் சிறப்பைப் பற்றி அறிந்து பேசிய சிரியா-அபிசீனியா போன்ற நகரங்கள், அவர் தற்காப்புக்காக நடத்திய போர் என்பவைகளைப்பற்றி மட்டிலும் குறிப்பிட்டால் போதும் என நினைக்கிறோம். முன்பு தண்ணீர் பஞ்சம் என்று குறிப்பிட்டோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரகாம் இஸ்மெயில் என்பவரால் கட்டப்பட்டு 365 சிலைகளை வணங்கி வந்த அந்த காபா என்ற இடத்திலிருந்த ஜம்ஜம் என்ற கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது.

      ஊர் மக்கள் நரபலியிட்டால் தண்ணீர் கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். நரபலி கொடுக்க யார் முன் வருவார்கள் ஆனாலும் அப்துல்லா என்பவரின் தந்தை அப்துல்லாவை ஒரு கையிலும், அவனை வெட்டுவதற்கு வாளை ஒரு கையிலும் ஏந்தி காபாவுக்கு புறப்பட்டார். மக்கள் எவ்வளவு கொடியவர்களாக இருந்தாலும் அழகான சிறுவன்.”*
     கூடியிருந்த ஊர் மக்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அதாவது பத்து ஒட்டகங்கள் என்று எழுதிய சீட்டு ஒன்றையும், அப்துல்லா என்ற ஒரு சீட்டு ஒன்றையும் குலுக்கிப் போட்டு இரண்டில் ஒன்றை எடுப்போம் என்றனர். அதன்படி செய்து பார்த்ததில் அப்துல்லா என்ற பெயர் வந்தது. இப்படி

குறிப்பு: இங்கே நான் அப்துல்லாவை அழகானசிறுவன் என்று குறிப்பிடுவதற்குக் காரணம், அப்துல்லாவின் திருமணம் நடந்த இரவு இருநூறு பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் எல்லாம் நம்மைதான் திருமணம் செய்துக் கொள்வார் எனக் காலமெல்லாம் காத்திருந்து கடைசியில் ஆமீனா என்றவர்களை திருமணம் செய்துக் கொண்டதால்தான்.

Two hundred virgins committed suicide on the night of Abdullah’s matrimonial என்று எழுதுகிறார் வரலாற்றாசிரியர்.