உத்தமர்கள் 171
12.விருந்தினர் விடைபெற்றுச் செல்லும்போது வீட்டின் கதவு வரையிலும் அவருடன் செல்வது என் வழக்கம்.
13.பசித்தவனுக்கு புசிக்கக் கொடுப்பது தானத்திலெல்லாம் சிறந்த தானம்.
14.நின்றுகொண்டு தொழுங்கள். முடியாவிட்டால் உட்கார்ந்துக்கொண்டு தொழுங்கள். அதுவும் முடியாவிட்டால் படுத்துக்கொண்டு தொழுங்கள்.
I 5.உண்மை பேசுவது கசப்பாயிருப்பினும் அதுவே சிறந்தது.
16.என்னை மிக உயர்ந்த நிலையில் வைத்துவிடாதீர்கள். நான் அல்லாவின் ஊழியனாகவும், தூதுவனாகவும் இருக்கிறேன்.
17.முஸ்லீம் அல்லாத குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறவர்கள் யாராயிருந்தாலும் என்னுடைய (கியாமத்) கடைசி நாளில் வாதாடுவேன்.
18.இறைவனை நம்புங்கள்: ஆனால் ஒட்டகத்தைக் கட்டி வையுங்கள்.
19.முஸ்லீம் அல்லாத குடிமக்களுக்கு நான் அளித்து வந்த பாதுகாப்பை நீங்கள் ஜாக்கிரதையாகக் கடைபிடிக்க வேண்டும்.
20.இலஞ்சம் கொடுப்பவன், வாங்குபவன் இருவரையுமே இறைவன் சபிப்பார்.
21.நீதிபதி கோபமாயிருக்கும்போது வாதி, பிரதிவாதி இருவருக்குமிடையே நீதி வழங்குதல் கூடாது.
22.தனக்காகவேனும், பிறருக்காகவேனும் உழைக்காதவன் இறைவனுடைய சன்மானத்தைப் பெறுவதில்லை.
23.சாட்சிகளைக்கொண்டு நிரூபித்தல் வாதியின் கடமை, பிரதிவாதி சத்தியம் செய்துதான் தீரவேண்டும்.
24. பொருமையினின்று விலகி இரு, ஏனெனில் நெருப்பு மரக் கட்டையை எரித்து சாம்பலாக்கிவிடுவதைப் போல் பொறாமை உன் நற்குணத்தை எரித்துவிடும்.