172 உலகைத் திருத்திய
25. இறந்தவர்களுடன் மூன்று பொருட்கள் வரும்; குடும்பம், பொருள்கள், செயல்கள், குடும்பம், பொருள்கள் திரும்பி விடும். செயல்கள் மட்டிலுமே கூடவரும்.
26. மூன்று காரியங்களில் பொய்ச் சொல்வது சட்ட விரோதமில்லை. மனைவியை மகிழ்விப்பதற்காக, போரில், சண்டையிடுகின்றவர்களை சமாதானம் செய்து வைப்பதற்காக.
27. கஞ்சத்தனமுள்ள தொழுகையாளனைவிட, அறிவற்ற தாராள குணமுடையவனையே இறைவன் நேசிக்கின்றான்.
28. வசிக்க ஒரு வீடு, மறைவான உறுப்புகளை மறைக்க ஒரு துணி, துண்டு ரொட்டி, கொஞ்சம் நீர், இந்த பொருள்களைத் தவிர வேறு எப்பொருளையும் வைத்திருக்க மக்களுக்கு உரிமையில்லை.
29. இந்த பூமியே ஒரு மஜீத். தொழுகை நேரம் எங்கே வந்தாலும் தொழுதுகொள்ளுங்கள்.
30. நோயாளிகள், பிராயணம் செய்துக்கொண்டிருப்போர் தொழவேண்டியதில்லை.
ஒருவர் பின் ஒருவராக நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தைத் தழுவுவதைக் கண்ட குரைஷிகளுக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. அவர்களில் உத்பா என்பவன், முகம்மதுவின் தலையைக் கொண்டு வருபவனுக்கு ஆயிரம் சென்னிற ஒட்டகங்களைப் பரிசளிப்பேன் என்றான்.
இந்த ஆசை வார்த்தையைக் கேட்ட 30 வயதுடைய உமர் என்பவன் கத்தியும் கையுமாக நபிகள் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருப்பவனை, அபிசுபியான் என்பவன் தடுத்து காரணத்தைக் கேட்டான். உமர் சொன்ன காரணத்தைக் கேட்டு கலகலவென சிரித்த சுபியான் சொன்னான், ‘அட பைத்தியக்காரா, உன் தங்கையும் மைத்துன்னும் இஸ்லாத்தைத் தழுவிவிட்டார்
குறிப்பு : முக்கியமானவற்றை மட்டிலும் மேலே குறிப்பிட்டிருக்கின்றேன்.