பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள் 173

களே, உனக்கு தெரியாதா என்றான். அவன் சொன்னதைக் கேட்ட உமர் ஓடிவந்து பார்க்கிறான். அவன் தங்கையும், மைத்துனனும் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதைப் பார்த்து உமரும் இஸ்லாத்தைத் தழுவிவிட்டான்.

     சில பெண்கள் நபிகளைப் பார்த்து, “ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறீர்களே, அதேபோல் ஒரு பெண் நான்கு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால் என்ன?” என்று கேட்டார்கள். “நீங்கள் நாளைக்கு வருகிறபோது ஒருவர் ஒரு குவளை ஒட்டகத்தின் பாலையும், ஒருவர் பசும்பாலையும், ஒருவர் ஆட்டுப்பாலையும், ஒருவர் கழுதைப்பாலையும் கொண்டுவாருங்கள்” என்றார். அதன் படியே கொண்டு வந்தார்கள். அந்தப் பாலை எல்லாம் ஒரு சட்டியில் கொட்டச் சொன்னார். அதைப் போல் கொட்டினார்கள். அவரவர்கள், கொட்டிய பாலை அவரவர்கள் கொண்டு போங்கள் என்றார். எப்படி முடியும்? அதாவது ஒரு ஆண் நான்கு பெண்களைக் கட்டிக் கொண்டால் ஒரே தந்தையாகையால் சொத்துரிமையில் சிக்கல் வராது. ஒரு பெண் நான்கு ஆண்களைக் கட்டிக் கொண்டால், குழந்தை இந்த நான்கு ஆண்களிலே எந்த ஆணுக்குப் பிறந்தது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இதைத் தான் இவ்வளவு அழகாக விளக்கினார்கள் நபி. 
    (இஸ்லாம் என்றால் அமைதி, முஸ்லிம் என்றால் உறுதி). நபிகளுக்கு நாற்பது ஆண்டுகள் ஆகின்ற வரையில் இவர் கொண்டிருந்த கொள்கைகள், நோக்கங்கள் அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை. உலகத்தின் மையத்திலிருப்பதும், பன்னீராயிரம் சதுர மைல்களைக் கொண்டதும், முஸ்லிம் பாஷாக்களின் ஆளுகைக்குட்பட்டதுமான அரேபியாவின் ஒரு பகுதியாகிய மெக்காவில் தோன்றிய சீர்த்திருத்தப் புரட்சி, அவர் காலத்தில் எளிதாகப் பரவிவிடவில்லை, ஒரு பக்கம் கிருஸ்துவர்கள், ஒருபக்கம் யூதககள். இன்னொரு பக்கம் குரைஷிகள். ஒரு பக்கம் பெனிஹவா வம்சத்தினர் ஆகியவர்கள். அவ்வளவு பேர்களையும். தான் ஒருவரே நின்றுசமாளிக்க வேண்டி வந்தது.