பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 உலகைத் திருத்திய

மிச்சமாளுர்கள். அதன் பிறகும் இருபத்திநாலாயிரம் பேரோடு வந்து முற்றுகையிட்டார்கள். என்றாலும் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அவர்களுடைய தலைவன் அபுசுபஹான் என்பவன் படைகளைப் பின்னடையக் கட்டளையிட்டான். போர் ஒய்ந்து நபிகள் தான் பிறந்த பூமியும், புண்ணிய நகருமுமான மெக்கா நகருக்குத் திரும்பினர்கள். அதன் பிறகும் இங்குமங்கு மாகச் சிலகலகங்கள் நேர்ந்தன என்றாலும் இறுதியில் முஸ்லீம் மக்களே வெற்றிபெற்றார்கள். இதுதான் கடைசி வெற்றி.

காபா மஜீத்தை புனிதப்படுத்த வேண்டிய பணியைத் தொடங்கி, 365 சிலைகளையும் அப்புறப்படுத்தி ஒருவனே இறைவன், ஒன்றே குலம்’ என்பதை அண்டையிலிருந்த நாடு களுக்கு மட்டிலுமல்ல, உலகத்துக்கும் அறிவித்துவிட்டார்கள்.

‘இன்று முதல் உங்கள் மதத்தைப் புனிதப்படுத்துகிறேன்: என் அன்பையும் உங்கள் மேல் சொரிகிறேன். இஸ்லாம் தான் நமது மதம் என்பதையும் சொல்லுகிறேன்’ என்றார். அதோடு எதிரிகளை எல்லாம் அழைத்து, நீங்கள் எனக்கு எவ்வளவு திங்கிழைத்திருந்தாலும்கூட அல்லாவின் திருநாமத்தால் உங் களனைவரையும் மன்னித்துவிட்டேன்’ என்றார். பதினன்கு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட குர்ஆன் இன்னும் அப்படியே அதன் எழில் குன்றாமல் ஒரு வார்த்தையும் மாற்றத் தேவையில்லாமல் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.

திருநபிகள் சிறையிலிருந்த போர்க் கைதிகளுக்கு ஒரு நிபந் தனையிட்டிருந்தார். அதாவது, எந்த கைதி பத்துபேருக்கு எழு தப் படிக்கக் கற்றுத்தருகிருனே, அவன் விடுதலையடையலாம் என்றிருந்தது. இப்போது எல்லாரும் விடுதலையடைந்ததோடு மன்னிக்கப்பட்டு இஸ்லாத்தையும் தழுவி விட்டனர். இதை யெல்லாம் கண்டு களிப்படைந்து தனது அறுபத்தி இரண்

குறிப்பு : பின்னல் வந்த அக்பர் என்ற மன்னர் அபுல் பாசில் என்

பவரை அழைத்து போட்டி குர்-ஆன் ஒன்றை எழுதச் சொல்லி அதற்கு தீனே இலாஹி என்று பெயர் வைத்தார். என்றாலும் அது தீயிலிட்ட சருகுபோல்கருகிபோயிற்று.