பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

கார்ல் மார்க்ஸ்

எவன் வெகு நேரம் உழைத்து உணவுக்கும், உடைக்கும், இடத்திற்கு போதாமல் தவித்தானே. எவனுடைய உழைப் பின் மூலம் உப்பரிகையில் வாழ்ந்துக்கொண்டு, உழைத்த வனுக்கு ஒட்டைக் குடிசையும் இல்லாமல் ஆக்கினனே, எவன் பழம் போன்ற தொழிலாளியின் சாரத்தைப் பிழிந்து தோலை துார எறிந்தானே, எவன் ஒடும் இயந்திரத்திற்கும் ஒய்வுண்டு, எங்களுக்கு ஓய்வில்லையா என்று கேட்டவனைத் தன் செல்வாக் கின் மூலம் அந்த உரிமை, ஊதியம் இரண்டையும் கேட்ட தொழிலாளியை குண்டாந்தடி, குத்திட்டி, தீ கக்கிய துப்பாக்கி குண்டுகளால் தாக்கித் துரத்தினனே, வாயிருந்தும் ஊமையராய், வயிறிருந்தும் பட்டினியாய்க் கிடந்தவர்களைக் கண்டு, இது உன் தலைவிதி என்று மதத் தலைவர்களைவிட்டு உப தேசம் செய்ய வைத்தானே, உற்பத்தி செய்வது நாங்கள், வினியோகம் செய்வது நீங்கள்; மூலதனம் ஒன்றிேைலயே இயந்திரம் இயங்காமலும், எங்கள் உடல் உழைக்காமலும் இருந்தால் எப்படி எல்லா இலாபத்தையும் நீங்களே அடைய முடியும்’ என்று தோல் உரிந்த எலும்புகளை எண்ணிக்காட் டினனே, எவன் வேலைக்கும் ஓய்வுக்கும் வித்தியாசம் தெரியா மல் உழைத் தானே அந்த உழைப்பாளியைக் கண்டு, எட்டு மணி நேரம் வேலை செய், எட்டு மணி நேரம் களியாட்டம் ஆடு, எட்டுமணி நேரம் ஒய்வெடுத்துக் கொள் ஒரு நாளைக்கு