பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 உலகைத் திருத்திய

மூன்று கூருக்கி அந்தப் பொன்னளை மேதினியெங்கும் மேதின மாகக் கொண்டாடச் செய்தவனுக்குக் காரணமாயிருந்த பொதுவுடமைத் தந்தை காரல் மார்க்ஸ் பிறந்த மாதம் மே மாதம். ஆகையால் அந்த மே மாதத்தை உலக உழைப்பாளி கள் ஒன்று கூடி முதலாளிக்கும் தங்களுக்கும் இருந்த கணக்கை நேர்படுத்திச் சரிபடுத்திய நாள் மே திங்கள். ஆகவேதான் அறிஞன் கார்ல் மார்க்ஸ் பிறந்த மாதத்தைத் தேர்ந்தெடுத் தார்கள்.

அந்தப் பேரறிஞன் எழுதிய காபிடல் Capital என்ற நூல், தலைவிதி என்றவர்களை ஒரேயடியாக மிக வேகமாகச் சாடியது. மன்னனை ஏவி அவர்களை அடக்கப் பார்த்ததின் விளைவாக எந்த இரண்டாவது நிக்கோலஸ் ஜார் மன்னனை முடிதுறக்கச் செய் ததோ, எந்த சிரைச்சாலையில் உழைப்பாளிகள் அடைப்பட்டார் களோ அதே சிறைச்சாலைகள் இன்றுஅடையாளம் தெரியாமல் இடித்துத் தள்ளி அதன் கடைசி கல்லேயும் பெயர்த்தெடுத்து அங்கெல்லாம் உழைப்பாளிகள் ஒய்வெடுக்கும் உல்லாச பூங்காவாக்கினர்களோ, அந்தத் தொழிலாளிகளின் கண்ணி ரைத்துடைக்க, தன் மனைவி மக்கள் கண்ணிர் சிந்த வறுமை யில் வாழ்ந்தான். அந்தப் பெருமகன் வாழ்ந்தான் என்றுகூட நம்மால் சொல்ல முடியவில்லை. விழுந்தான், எழுந்தான், மெல்ல நடந்தான். அதுவும் தன் அருமை நண்பன் ஏஞ்சில்ஸ் என்பவனல் கொடுக்கப்பட்டுவந்த உதவியெனும் கைத்தடி யைப் பிடித்துக்கொண்டு நகர்ந்தான் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். t

பொதுவாக மனித இயல்புகளை ஆராய்பவர்களில் சிலர் தான் அவற்றிலுள்ள ஏற்றத் தாழ்வுகளே எப்படிச் சரிப்படுத்த லாம் என்றெண்ணுகிறார்கள். அதற்காக வருந்தாமல் அவர வர்கள் வந்த வழி என்பதோடு சிலர் நின்றுவிடுகிறார்கள். ஒரு சிலர் ஏன் மாற்றியமைத்தால்"என்ற வினவோடு நின்று விடுகி ருர்கள். சிலர் மாற்றுவதற்கு என்னவழி என்ற கேள்வியோடு நின்று விடுகிறார்கள். சிலர்மாற்ற நினைத்தால் ஜபமாலை ஒப்புக் கொள்ளாதே, நமக்கேன் அந்த பொல்லாப்பு என்ற