பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 உலகைத் திருத்திய

ஊதாரணமாக, ஒரு தொழிலாளி முதலாளியை அணுகி, நீர் ஏன் இவ்வளவு செழிப்பாக இருக்கிறீர். நான் ஏன் ஏழை யாகவே இருக்கவேண்டும் எனக் கேட்கிருன் என்று வைத் துக்கொள்வோம். அதற்கந்த முதலாளி, எனக்கு இந்த பாக்கியத்தைத் தந்தவன் ஆண்டவன்’ என்கிருன். அப்போது இந்தத் தொழிலாளி ஆண்டவனை ஒப்புக்கொள்ளுவதாயிருந் தால் முதலாளியை இப்படி அவன் கேட்க முடியாது. ஆகவே தான் அங்கே ஆண்டவன் அல்லது ஆண்டவன் என்ற பெயர்; அவனைக்காட்டி பயமுறுத்துகிற மதத் தலைவர்கள்; அவர்கள்

குறிப்பு :- நான் நெல்லை நகர் பக்கத்திலுள்ள பேட்டை யில் இருக்கும் இந்துக் கல்லூரியில் பேசச் சென்றிருந்தேன். இந்தப் பேட்டைக்கு இரண்டு முறை வந்திருக்கிறேன். ஒரு தரம் திரு நபிகள் விழாவில் பேச, இரண்டாவது முறை தி. மு. க. கூட்டத்தில் பேச. இந்த இந்து கல்லூரி நெல்லை நகரின் மையத்தில் இருந்தபோது, இந்த கல்லூரி பேட்டைக்கு மாறிய பின் இது முதல் முறை. அந்த மாணவர் பேரவை விழாக் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் ஒரு பொது உடமைத் தோழர் என்றார்கள். இருக்கட்டும், அதனலென்ன என்று என் பேச்சைத்தொடங்கி பேசிக்கொண்டே வந்து கடைசியில் சொன்னேன். இந்தக் கூட்டத்தின் தலைவர் ஒரு பொது உடமைக் கட்சியைச் சேர்ந்தவர் என்று கேள்விப்பட் டேன், மெத்த மகிழ்ச்சி. ஏனெனில் அவர் கடவுளை ஒப்புக் கொள்ள முடியாதவர். காரணம் பொது உடமைவாதிகள் பச்சை நாத்திகராகத்தான் இருந்து தீரவேண்டும். ஏன் கடவுள் மேல் இவர்களுக்கு கோபமா, இல்லை. ஏன்? கடவுள் என்று ஒன்று இல்லை என்கிறபோது கோபித்துக்கொள்வது யார் மேல், கடவுளைப் பற்றி இந்த ஆராய்ச்சி வருவதற்குக் காரணமென்ன? மாணவ நண்பர்களே, இங்கே நீங்கள் ஒன்றை சிந்திக்கவேண்டும். ஒரு பொது உடமைவாதி நாத்திகராகத் தான் இருக்கவேண்டுமென்பது நான் சொன்ன கருத்தாக ஏற்றுக் கொள்வதைவிட இந்த விவகாரத்திலுள்ள சிக்கல்களை தெரிந்துக் கொள்வது நல்லது என்று பேசினேன்.