பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 183

உன்னை சபித்து விடுவேன் என்று உருட்டிக்காட்டும் ஜெய மாலை; ஜெபமாலை கைநழுவாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உத்திரவாதத்தைக் கொடுத்த அரசாங்கம்; ஆக அவ்வளவுக்கு விடைதந்தனுப்ப வேண்டியவனகிருன்; அல்லது மறுக்க வேண்டியவனகிருன் என்பதுதான் கார்ல் மார்க்சின் சித்தாந்தம். இனி அறிஞன் கார்ல் மார்க்சின் வரலாற்றைக் கவனிப்போம்.

கார்ல் மார்க்ஸ் பிறப்பு

பிறநாடுகளில் சில சீர்திருத்தப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய காலத்தில் கூட, தன்னிலையிலிருந்து கொஞ்சமும் மாருமல், மாதா கோவில்கள் என்ன, மதத்தலை வர்கள் என்ன, வைதீகர்களின் பெருமைமிகுந்த வாழ்க்கை என்ன, பக்திமான்கள் கூட்டமென்ன, ஒன்றும் குறைவற்ற ஒரு மதக் கோட்டையாகவே இருந்த ட்ரியர் என்ற ஊரிலே தான் மார்க்சின் பெற்றாேர்கள் பிறந்தார்கள். இந்த ஊர் ஜெர்மனியின் மேற்கு எல்லையும், பிரான்சின் கிழக்கு எல்லையும் சந்திக்கின்ற இடத்தில் இருந்த காரணத்தால் ஜெர்மனியின் கலையோ பிரான்சின் நாகரிகமோ இந்த ஊரைத் தீண்டவே யில்லை. 16, 17 நூற்றாண்டில் இந்த ஊர் இதே நிலையில்தான் இருந்தது. இவ்வளவு வைதீக மேகங்கள் சூழ்ந்த ஊரில்தான் கடவுளையும், மதத்தையும் செல்வச் சீமான்களையும் தொழிலதி பர்களையும் சந்திக்கிழுத்து, தொழிலாளர்கள் முகத்தில் ஒரு ஜீவகளையை உண்டாக்கித் தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்தான். அநேகமாக எல்லா ஊர்களிலும் இப்படி மதத்தின் பேரால் நடக்கின்ற அநியாயங்களை நேரில் பார்க்கிற வாய்ப்பு பெற்ற வர்களில் சிலர் பகுத்தறிவு வாதிகளாக மாறுவதில் வியப் பில்லை. கார்ல் மார்க்ஸ் கழுத்தை அவர்கள் ஜபமாலை அறுக்க வில்லை. தொழிலாளர்களின் மலர்மாலைகள் அலங்கரித்தன. இப்படி பேசுகிறவர்கள், நினைக்கிறவர்கள் முன்பெல்லாம் கூட பேசியதுண்டு. ஆனல் அப்படிப் பேசியதால் சிரச் சேதம் செய்யப்பட்டதும் உண்டு. ஆனல் என்றும் அழிக்கமுடியாத