பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் I85

வெறுப்பு. அதனுல் இவர்கள் பின்பற்றி வந்த யூத மதத்தின் மேல் ஒரு வெறுப்பு. இதன் காரணமாகவும், தன் தொழில் சரியாக நடக்காமல் குடும்பம் கஷ்டப்படுகிறது என்ற கருத்தி லும் யூத மதத்தைவிட்டு கிருத்துவ மதத்தைத் தழுவிவிட் டான். மனைவி இவனைப் பின்பற்றி ஓராண்டு கழித்து கிருத்துவ மதத்தைத் தழுவினுள். மதம் மாறிய பிறகு ஹெர்ஷெல் தன் பெயரை ஹென்றி மார்க்ஸ் என்றும், மனைவி ஹென்ரிட்டே என்றும் மாற்றிக்கொண்டார்கள். இப்படி இவர்கள் கிருத்து வத்தைத் தழுவிய பிறகு தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு எல்லா வசதிகளும் பெற்று நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

1818ம் ஆண்டு, மே திங்கள், ஆரும் நாள் இரவு 1-30 மணிக்கு மார்க்ஸ் பிறந்தான். கூடப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர். இரண்டு ஆண்கள், ஐந்து பெண்கள். இவர்களில் நான்கு பேர் சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். எஞ்சி யிருந்த மூன்று சகோதரிகளுக்கும் திருமணமாகி குடும்பம் நடத்தப் போய்விட்டார்கள். பிறகு மகனைப் பற்றிய கவல்ை பிறந்தது. மகனும் தன்னைப்போலவே வழக்கறிஞர் தொழிலை நடத்தி, பேரும் செல்வமும் சம்பாதிப்பான் என்று நம்பியிருந் தனர். ஆனல் மார்க்சின் எண்ணம் வேருயிருந்தது. இவனைப் பள்ளியில் சேர்த்தபோது யாருக்கும் அடங்காத முரடனயிருந் தான். சுறுசுறுப்புள்ளவனாகவும், பிடிவாதக்காரளுகவும் இருந் தான், ஆளுல் இவனுக்கு சிறுவயதிலிருந்தே கவிபாடும் திறமை யிருந்தது என்று தெரிகிறது. ஏனெனில் இவனுடைய பிள்ளை களைக்கூட சில நேரம் கவியின் மூலமே திட்டுவாளும். இலத்தின், கிரேக்க மொழி, பிரஞ்சு மொழி ஆகியவைகளைக் கற்றுத் தேறினன்.

ஒருசமயம் அவனே, “ஒர் இளைஞன் ஏதாவதொரு தொழிலுக்குப் போகவேண்டுமென்று எண்ணுவதற்கு முன், ‘அவன் மனதில் உதிக்கும் எண்ணங்கள்’ என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதும்படி பணித்திருந்தார்கள். அவன் எழுதிய கட்டுரையைப் படியுங்கள்.

l B 108