186 - உலகைத் திருத்திய
“நாம் எந்தத் தொழிலுக்குத் தகுதியுடையவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிருேமோ, அந்தத் தொழிலில் நாம் அனேகமாக நுழையமுடியாமல் இருக்கலாம். ஏனென்றால், நமக்கும் சமூகத்திற்கும் எந்தவிதமான தொடர்பு இருக்க வேண்டுமென்று கருதுகிருேமோ அதற்கு முன்பே அது உறுப் பெற்று விடுகிறது.”
இதைக் கண்ட ஆசிரியர்கள் வியப்படைந்து இவனை வாயார வாழ்த்தினர்கள். இந்தக் கருத்துக் கொண்ட பெரிய வர்களே அங்கிருந்தார்கள். பிறகு உயர்தரக் கல்வி பயில்வதற் காக, பான் கலாசாலையில் சேர்ந்து சட்டத்தைப் படிக்கத் துவங்கினன். தந்தை ஏதோ வற்புறுத்துகிருரே என்று அதைப் ப்டித்தானே தவிர நாட்டம் அதில் செல்லவில்லை. அங்கே இருந்த சில சங்கங்களில் சேர்ந்துகொண்டான். அங்கே குடிகார சங்கம் என்று ஒன்று இருந்தது. அதில் உறுப்பினளுகச் சேர்ந்து விரைவில் அதன் தலைவனுமாகிவிட்டான். மதுபானத்தை ஒரு சொட்டாவது சுவைக்காமலிருக்க மாட்டான். ஒருநாள் அதிக மாகக் குடித்துவிட்டு தெருவில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட தால் ஒருநாள் சிறையில் தள்ளப்பட்டான். இதையறிந்த தந்தை, அவன் பான் கலாசாலையிலிருந்தால் அதிகமாகக் கெட்டுப்போவான் என்றெண்ணி இவனே பெர்லின் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க அங்குபோய்ச் சேர்ந்தான்.
கோடை விடுமுறையை தன் சொந்த ஊரில் கழிப்பதற் காக அங்கே சென்றிருந்தபோது, பக்கத்து வீட்டிலிருந்த ஜென்னி என்பவளைக் காதலித்தான். ஜென்னி அழகுள்ளவள். இவன் அழகில்லாதவன்; ஆனால் அறிவாளி. இங்கே அழகும் அழகும் காதலிக்கவில்லை; அழகும் அறிவும் காதலித்தது என்று சொல்லலாம்.
அவனுக்கு வயது 18. ஜென்னியின் வயது 22. குடும்ப அந்தஸ்தில் ஜென்னி குடும்பத்தைவிட இவன் குடும்பம் அவ்வளவு சிறப்பானதல்ல. இன்னும் அவ்வளவு அழகுள்ள