பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 189

உற்பத்தியாகின்றன. போட்டி ஏற்படுகிறது. அதனல் முதலாளித்துவத்திற்கு அழிவு காலமும் தொடங்குகிறது. அதனால் தொழிலாளர் வர்க்கம் என்ற ஒன்று தனியாகத் தோன்றுகிறது. பல ஊர்களில் சிதறிக்கிடந்தவர்கள் ஒரு நகரத்தில் தோன்றுகிற பெரிய பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திரளுகிறர்கள். தங்கள் உரிமையைக் கேட்கிரு.ர்கள். முதலாளிகள் தர மறுக்கிரு.ர்கள். இதல்ை அடிக்கடி போராட் டங்கள் நடக்கின்றன.

இரண்டாவது பகுதி : பொதுவுடைமை வாதிகளுக்கும் மற்றத் தொழிலாளர்களுக்கும் இருக்கின்ற தொடர்புகள், பொதுவுடைமையின் நோக்கங்கள் அவைகளுக்குக் காட்டப் படும் எதிர்ப்புகளுக்குத் தரப்படும்விளக்கங்கள், தொழிலாளர் கள் கைக்கு அதிகாரம் வந்தால் என்னென்ன சட்டதிட்டங் கள் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

மூன்றும் பகுதி : அபேத வாதம் என்றும் பொதுவுடைமை என்றும் சொல்லிக்கொண்டு தோன்றியுள்ள பல போலி சங்கங்களுக்கும், நூல்களுக்கும் மறுப்பு கூறப்படுகின்றன. பொதுவாக ஒரு சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையை ஒட்டியே அரசியல் அமைப்பு இருக்கின்றது. முரண்பட்ட பல சக்தியின் போராட்டத்திற்கிடையே ஆக்கம் அழிவுஇவைகளைக் கொண்டே சமூகம் வளர்ச்சியடைந்து வத்திருக்கிறது. முதலாளித்துவம் தன்னையே அழித்துக் கொள்ளும் சக்தியை தன்னிடக்திலேயே கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான். சமூகப் பிரிவினையில்லாத சமுதாயம் அமையும். இவைபோன்ற மார்க்சியத்தின் அறிக்கையைத் தான் பொதுவுடைமைத் தத்துவம் என்று வரையறுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

Q9m sslg). (HEGALISM)

இங்கே ஹெகல் என்பவன் மக்களுக்கு சுட்டிக்காட்டியிருந்த சில கருத்துக்களை சொல்லியாக வேண்டும். ஏனெனில்