190 உலகைத் திருத்திய
அன்றிருந்த ஜெர்மன் மக்கள் எதற்கெடுத்தாலும் ஹெகலி சத்தை மேற்கோள் காட்டுவார்கள்.
அதன் தத்துவம் : அவனுடைய ஆராய்ச்சியில் நாட்டைப் பற்றி அவன் வெளியிட்டிருந்த கருத்துக்கள், மனிதன், அவனுடைய மனம், கடவுள், நாடு எண்ணத்தின் வளர்ச்சி, பொருள்களின் வளர்ச்சி, காரண காரிய தொடர்பு ஆகிய எல்லாம் அடங்கியிருந்தது. நா ட் ைட ப் பற்றி அவன் வெளியிட்ட கருத்துக்கள் அக்காலத்து ஜெர்மனியின் கொடுங் கோலாட்சியை ஆதரிப்பதாய் இருந்தது. அதாவது அரசு என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது. அது மக்களிடத்தி லிருந்து பிறக்கிறதென்றாலும் அதற்கென்று சக்தி ஒன்று தனியாக உண்டு. அந்தச் சக்திக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது மக்களின் சுடமை. ஏனெனில் அது செய்கிற எதுவும் தவருயிருக்காது. இந்தக் கருத்துக்கள் எந்த எதேச் சாதிகார அரசுக்கும் மகிழ்ச்சின்யக் கொடுக்குமல்லவா. எது இப்போதிருக்கிறதோ அது தேவையானதால்தான் இருக்கிற தென்றும், அதனல் அதுதான் நியாயம் என்றும் முதியவர் களான தேசபக்தர்கள் கூறினர்கள், எது நியாயமோ அதுவே தான் இருக்கவேண்டுமென்று இளைஞர்கள் கூறிஞர்கள். அத ல்ை முதிய ஹெகலியர்கள் என்றும் இளைய ஹெகலியர்கள், இருவகையினர் இருந்தனர். முதியவர்கள் உள்ளதை உள்ள வாறே நிலைநாட்டப் பார்த்தார்கள். இளைஞர்கள் உள்ளதை மாற்றப் பார்த்தார்கள். மார்க்ஸ் இளைஞர் கட்சியில் சேர்த்து கொண்டான். ஆனல் பிந்திய கார்ல் மார்க்சின் கருத்துக்கள் ஹெகலிசத்தின் பக்கம் சாயாமல், தொழில், தொழிலாளர் மூலதனம், உழைப்பு, பங்கீட்டுமுறை ஆகியவைகளையே மைய மாகக் கொண்டு ஓடின. படிப்படியாக திருத்தலாம் என்ற நோக்கத்தோடு இளைஞர் ஹெகலிசகட்சியில் சேர்ந்திருக்கலாம்.
இதுவரை திருமணம் செய்துகொள்ளாமலே இருந்த இவனுக்கு, இவனுடைய அழகில்லாத உருவத்தையே திருமணம் செய்துகொள்ளுவேன் என்று பிடிவாதமாகவும், காதலியாகவும் இருந்த ஜென்னிக்கும், 1848 ஆண்டு ஜூன்