பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 உலகைத் திருத்திய

ஆலிங்கனம் செய்து கொள்கிறேன். என் அரிய உண்மையான நண்பனே, உன்னே வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

&sfrtfsi Loftfr&gi

16-8-1867

மற்ற இரண்டு பாகங்கள் மார்க்ஸ் இறந்தபிறகு ஏஞ்செல் வில்ை வெளியிடப்பட்டன, மார்க்ஸ் படித்துக்கொண்டிருந்த அறைவெளிச்சம் நிறைந்த அறை. தோட்டத்தின் பக்கமாக ஒரு ஜன்னல் இருந்தது. அதற்கு எதிர்புறத்தில் ஒரு கணப்புச்சட்டி. அதன் அருகில் புத்தக அலமாரிகள். அதன்மேலே பத்திரிகைக் கட்டுகள், சுவர்ப்பலகையின் மீது புத்தகங்கன். பக்கத்தில் ஒரு மேசை. அதில் சுருட்டுத் துண்டுகள், தீப்பெட்டிகள். போட்டோ படங்கள், குறிப்பு எழுதும் சிறியசிறிய நோட்டுப் புத்தகங்கள். இவற்றை ஒழுங்காக அடுக்கி வைப்பதற்கும் வடமாட்டார். இதுதான் அவர் ஆராய்ச்சி செய்த இடம். கம்யூனிஸ்ட் அறிக்கையில் சொன்ன பத்து திட்டங்கள் வரு மாறு:

1. நிலத்தின் மீதுள்ள தனிச் சொத்துரிமையை ரத்து செய்துவிடல், நிலவரிப் பணத்தைப் பொதுக் காரியங்களுக் காகப் பயன்படுத்துதல்.

2. அதிகமான அல்லது படிப்படியாக உயர்வுடைய வரி விதித்தல்.

3. பரம்பரை, பாத்யதை, சொத்து என்பவற்றை ரத்து செய்தல்.

4. நாட்டைவிட்டு வெளியேறியவர்கள், நாட்டுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.

5. லேவாதேவி தொழிலை அரசாங்கத்தின் சொந்தத்தின்

கீழ் கொண்டு வருதல். இதற்காக அரசாங்கத்தின் மூலதனத் தைக் கொண்டு ஒரு பாங்கி ஏற்படுத்துதல். -