பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் - 197

பள்ளி வாழ்க்கை கசந்தது. ஜெனோவா சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இளம் வயதிலேயே உதித் தது. ஒரு படகை எடுத்துக்கொண்டு தன் நண்பர்களுடன் தாய் தந்தையருக்குத் தெரியாமல் ஜெளுேவாவை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டான். ஆனால், ஒரு பாதிரி தந்த தகவலின் படி, அப்பயணம் கரிபால்டியின் தந்தையால் தடுக்கப் பெற்று, கரிபால்டி சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியதா யிற்று.

காலம் அவனைக் கப்பலில் பணியாற்றும் பையளுக ஆக்கி யது. பல பெரிய துறைமுகங்களைக் காணும் அரிய வாய்ப்பினை இதனால் பெற்றான், ஒடிசா, ஜிப்ரால்டர், கனரீஸ், கான்ஸ் டாண்டி நோபிள் போன்ற பெரிய துறைமுகங்களைக் காணும் வாய்ப்பையும், அவன் தன் தந்தையின் கப்பலில் டைபர் நதியில் சென்றுகொண்டிருக்கும்போது, ரோம் நகரத்தைக் காணும் வாய்ப்பினையும் பெற்றான். ரோம் நகரத்தை கண்ட தும் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை, பிற்காலத்தில் கரிபால்டி எழுதுகிருன்: ‘ என்னுடைய இளம் உள்ளத்தில் தோன்றிய கற்பனயாக வருங்காலத்தில் ஒருங்கிணைந்த இத்தாலியின் தலைநகராக ரோமைக் கண்டேன்’ என்கிருன். ரோம் நகரமே இதாலியாகும். -

பிறகு இதாலியின் தனி உரிமைக்காக, இதாலிய நாட்டுப் பற்றுகொண்ட, தியாகிகள் கொண்ட யங்இடாலி என்ற சங்கம் இயங்கி வந்தது அச்சங்கத்தில் ஒரு அங்கத்தினராக கரிபால்டி சேர்ந்து, இதாலியின் ஒருங்கிணைப்பிற்காகத் தன்னை , அற்பணித்துக் கொண்டான்.

தூய உள்ள மும், நாட்டைச் சுதந்திர நாடாகக் காண வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் கொண்ட, நாட்டின் அமைதியக் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாடு கடத்தப்பட்டு, மார்சேல்ஸ் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்த மாஜினியைக் காணச் சென்றான். தாகத்தோடு இருக்கும் ஒருவன் நீர் ஊற்றைநோக்கிச் செல்வதைப் போல, நாட்டின்