பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#98 உலகைத் திருத்திய

விடுதலைக்காக பாடுபடும் வழிகாட்டியை நாடிச் சென்றேன் என்று கூறுகிருன் கரிபால்டி. ஜோசப் மாஜினியை தன் நண்பராகவும், ஆசானகாவும் கரிபால்டி கருதினன். நம்மைச் சுற்றி யாவரும் உறங்கிக்கொண்டிருக்கும்பொழுது, மாஜினி மட்டும் தான் விழிப்புடனிருந்து நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார் என்று குறிப்பிடுகிருன் கரிபால்டி.

இளம் இதாவியப் படை முதலில் இதாவிய மன்னனுண்ட சவாய் என்னும் நகரத்தை நோக்கி முன்னேறியது. அந்நியர் களான ஆஸ்திரியர்கள், நேப்பிள்ஸின் போர்பன்ஸ் இவர்கள் ஆண்ட பகுதிகளின்மீது படையெடுக்காமல், இதாலிய மன்னன் ஆண்ட பகுதியை படையெடுத்ததற்குக் காரணம், அம்மன்னன் மதகுருக்களின் ஆணைகளுக்குட்பட்டு, முற் போக்குக் கொள்கைகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டு மென்ற ஒரே எண்ணத்தில், மக்களுக்குப் பெருந்திங்கினை விளை வித்தான். எங்கும் உளவாளிகளின் நடமாட்டம். மாஜினி மேல் சாட்டப்பட்ட குற்றம், அவர் சிந்தனையில் ஆழ்ந்து, இரவிலே உலாவுவதும் சிந்திப்பதும் கூடாதாம்!

இப்படையெடுப்பில் கரிபால்டிக்கு அளிக்கப்பட்ட பங்கு, ஜெனேவாவை நோக்கிச்சென்று, ஜெளுேவாவிலுள்ள படை களைத் தம் பக்கம் அழைத்துக்கொள்வதுதான். ஆனால் இத் திட்டம் பலன் அளிக்கவில்லை; எதிரிப் படைகள் இவனைச் சூழந்துகொண்டன. தன்னுடைய சாமர்த்தியத்தைப் பயன் படுத்தி, பழம்விற்கும் பெண்ணின் உதவியால், விவசாயி உடையணிந்து, ஜெனோவாவிலிருந்து நைசுக்கு ஓடி, பிறகு நைசிலிருந்து பிரான்சு நாட்டை அடைந்தான். பிரான்சு நாட்டிலுள்ள மார்சேல்ஸ் அடைந்தபொழுதுதான் சமூகத்தி லிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும், தான் எங்கு காணப்படி னும் சுட்டுத் தள்ளப்படவேண்டும் என்னும் அரசாணையை பத்திரிக்கையிலே படித்தான். முதன் முதலாகத் தன்னுடைய பெயர் பத்திரிக்கையிலே பொறிக்கப்பட்டுள்ளதை கண்டு பெருமகிழ்ச்சியடைந்தான். -