200 உலகைத் திருத்திய
காரணமாக இருந்த, கரிபால்டியின் மரண சாசனத்தை எழுதி யவனே சார்லஸ் ஆல்பர்ட், கரிபால்டியின் சேவையை வேண்டினன். கரிபால்டியை தாய் நாடு, நைஸ், கோலாகல மாக வரவேற்றது. கரிபால்டி வாய்மை தவருமல் தன்னுடைய வாளை மன்னனிடம் அளித்தான். மன்னனே, பழைய துரோகி கரிபால்டி என்ற எண்ணத்தில், கரிபால்டியை, போர் அமைச்சருடன் அனுப்பினன். அமைச்சனே, பீட்மாண்டில் உனக்கு வேலை இல்லை, நீ மீண்டும் உன் கப்பற்கொள்ளைத் தொழிலை மேற்கொள்ளலாம்’ என்று அறிவுரை புகட்டினன். மனம் நோந்து, அவமானப்படுத்தப்பட்ட கரிபால்டி, மிலன் என்னும் மாநிலத்தை அடைந்தான். அம்மாநில அரசு கரிபால்டியை பணியில் அமர்த்தி, சரிவர ஆயுதமில்லாமலும், உடையில்லாமலும் கொண்ட, சிரிய படையைக் கொடுத்து, பெர்கமோ மீது படையெடுக்கும்படி ஆணையிட்டது. செய்தி அறிந்தவும், 3000க்கு மேற்பட்ட தொண்டர் படையினர் அவனைச் சுற்றி வட்டமிட்டனர். ஆல்ப்ஸ் மலையின் அடி வாரத்திலிருந்து ஆஸ்டிரியாவுடன் போரிட்டான். ஆளுல் ஆஸ்டிரியப் படை இவனே தோற்கடிக்கு முன்னர், தான் எடுத்துக்கொண்ட முயற்சி மக்களின் நலன் கருதியே அன்றி வேறில்லை என்னும் எண்ணம், தன்னுடைய நாட்டு மக்களின் உள்ளத்தில் பதியுமாறு செய்தான். திடீரென்று ஜூரம் கண்ட தால், கரிபால்டி தன்னுடைய படையைக் கலைத்துவிட்டு, தன் பகுதியான நைசுக்குத் திரும்பினன். ஆனால் ஒய்வெடுக்கும் எண்ணம் அவனுக்கில்லை.
ரோமக்னவை படையெடுக்கு முன்னர், மக்களிள் மனதை அரசிற்கு எதிராக மாற்றும் வல்லமை பொருந்திய கரிபால்டியை தடுத்து நிறுத்தினன், போப்பாண்டவரின் அமைச்சன் ரோளி. பிறகு அமைச்சன் ரோஸி கொலை செய்யப்பட்டதை அடுத்து, விவசாயி போல் மாறுவேட மணிந்து, கயேடா என்னுமிடத்திற்கு ஓடினன்.
கரிபால்டியினர் ரோமை முற்றுகையிட்டனர். போர் தன்னுடைய மக்கட் புரட்சியினை மதிக்கவில்லை. எவ்வகையிலா