பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 203

மரோம என்னுமிடத்தை அடைந்தனர். அவர்களுக்கு ஒரு ரகசிய செய்தியும் படகொன்றும் காத்திருந்தது.

அரசியல் கனவுகள், நோக்கங்கள், யாவும் சீர்குலைந்து ஒரு குப்பை மேடாகிவிட்டன என்ற நிலையில், அவர்கள் நைஸ்ஸை அடைந்தார்கள். அங்கிருந்து டியூனிஸ்க்கு பயணமானன். பிரான்சின் துர்போதனையினால், கரிபால்டிக்கு டியூனிஸ் வாழ்வளிக்க மறுத்தது. ஜிப்ரால்டரில் அந்நாட்டின் கவர்னர் கரிபால்டியை ஒரு கணமும் இருக்கக் கூடாது என்று ஆணை யிட்டான். அங்கிருந்து சொக்கட்டன் காய் கட்டத்தை விட்டு கட்டம் மாறுவதுபோல், அமெரிக்கா பயணமானன். சில காலம் அங்கு மெழுகுவர்த்தி செய்து உற்சாகமாகக் காலத் தைக் கழித்தான். -

காலத்தை எதிர்நோக்கி இருங்கள்; இதுதான் அவன் அறிந்த பாடம். 1859ஆம் வருடம் தக்க தருணம் வந்தது.

கவூர் என்னும் ராஜதந்திரி விக்டர் இம்மானுவல் பீட்மாண்ட் பிரஜைகளில் விருப்பத்திற்கு எதிராக, இதாலியை அந்நியர்கள் ஆதிக்கச் சங்கிலியிருந்து விடுவிக்க எண்ணி, பிரான்சுடன் நட்பு கொண்டான். பிரான்சின் நட்புடன் ஆஸ்டிரியாவை எதிர்க்கப் புறப்பட்டான். டியூரினுக்கு அழைக்கப்பட்ட கரிபால்டியும் முழு ஆதரவு அளிக்க உடன் பட்டான். கவூரின் நட்பு. உண்மை நட்பு இல்லை என்பதை கரிபால்டி அறிவான். இருந்தும் நாட்டின் ஒற்றுமைக்காக 5000 தொண்டர்களுடன் (அத் தொண்டர் படைக்குப் பெயர் ஆல்ப்ஸ் மலையின் வேடர்கள் என்பதாகும்.) இச்சமயம் நாம் வெற்றி பெறுவது உறுதி, நான் பெருந்தலைவர்களையெல்லாம் திருப்தி படுத்திவிட்டேன். என்று கூறி போருக்குப் புறப் பட்டான். பீட்மாண்டின் படை 75,000. இதற்கு எதிராக ஆஸ்டிரியப்படை 2,00,000 கொண்டது. 1,60,000 போர்வீரர் கள் கொண்ட பிரெஞ்சுப் படை பீட்மாண்டிற்கு உதவி செய்ததில் மஜெண்டா, சொல்பெரிநோ என்னுமிடங்களில் நிகழ்ந்த இரண்டு போரில் வெற்றி கிட்டியது. போரில்