பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 உலகைத் திருத்திய

அடைந்த வெற்றி வாகைக்கிடையில், இதாலியை ஒரே நாடாக்கும் எந்த ஒரு நோக்கத்திற்கும், தான் உடந்தையாக இருக்கப்போவதில்லை என்று பிரான்சு அறிவித்து, தோல்வி யடைந்த ஆஸ்டிரியப் படையுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத் திக்கொண்டு, பீட்மாண்டையும் ஆஸ்டிரியவுடன் ஒப்பந்தம் செய்யத் தூண்டியது. இவ்வொப்பந்தத்தால், கரிபால்டியின் சொந்த இடமான நைசை ஆஸ்டிரியாவுக்கு கொடுக்கும்படி யாயிற்று. கவூர் தாய் நாட்டையே காட்டிக்கைாடுத்து விட்டான்; இதாலி அவனே மன்னிக்கவே மன்னிக்காது என்று முழங்கினன் கரிபால்டி.

வில்லாப்ராங்கா ஒப்பந்தத்தினல் ஏற்பட்ட கொந் தளிப்பு சிசிலியின் நாட்டுபற்றுள்ளோர், ஆஸ்டிரியாவுக்கு எதிராகக் கிளர்ந்தெழந்தார்கள். எங்களுக்கு உங்களுடைய ஒத்துழைப்பைத் தாருங்கள் என்றனர். கரிபால்டி அவர்களு டன் ஒத்துழைப்பதை தடுக்க முயற்சித்தான். ஆயினும் விக்டர் இம்மானுவலின் முயற்சியால் கரிபால்டி, சிசிலியின் உதவிக்குச் சென்றன். கரிபால்டி அங்கு போவதால் நமக்கு ஏதாகிலும் நன்மை கிட்டும்; நாம் அவர்களுக்கு உதவி செய்யவேண்டிய தில்லை. நம்முடைய தப்பான செயல்களினல் விளைந்த கேடு களுக்குக் காரணங்களை நாமே அறியமாடோம் என்று இம் மானுவல் கூறி கரிபால்டியை போகவிட்டான்.

கரிபால்டியின் படை வெறும் 1000 வீரர்களே சொண்ட தாயினும், இக்காலப் பெரும்படையினையும் இகழ்ந்து பேசும் அளவிற்கு, வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடத்தைத் தேடித் தந்துவிட்டது. .

தன்னுடைய சிறு படகுகளின் உதவியால், ஜெளுேவா விலுள்ள வில்லா ஸ்பினேலா கடற்கரையிலுள்ள இரண்டு கப்பல்களை தன்வசப்படுத்தி, அக்கப்பல்களிலுள்ள மாலுமிகளை யும் தன்னுடன் சேரும்படிச் செய்தான். கரையில் பெருந் திரளான மக்கள் கும்மிருட்டில் அவனை வரவேற்றனர்.