பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 09

ருக்கிற பகுத்தறிவுக் கொள்கையை எதிர்க்கிறேன்” என்றான். தேர்தல் பிரசாரத்தில் கூட இவன் தன் கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. ஆகையாலே தோற்கடிக்கப்பட்டான். தேர்தலில் தோற்ற பிறகு இராணுவத்தில் சேர்ந்து கலோனல் என்ற படையின் ஒரு பிரிவுத் தலைவன் என்ற நிலைக்கு உயர்ந் தான். ஒரு சிறிய படைக்குத் தலைமை வகித்துப் போர் முனைக்குப் போய் பலமுறை போராடி எதிரிகளிடம் சரண டைய வேண்டி வந்தது. இவனுடைய திறமை குறைவுதான் தோல்விக்குக் காரணம் என்று சொல்லி பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள். பிறகு நேராக ஐரோப்பியாவிற்குப் போய் 1875 முதல் 1878 வரையில் டிக்கன்ஸ், பர்னஸ், ஷேக்ஸ்பியர் இவர்களது நூல்களேயெல்லாம் படித்து தன் பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டு, அங்கிருந்த நெப்போலியன் சிலைக்கு முன்னல் நின்று அந்த மாவீரனின் வெற்றிகளும், இறுதியில் அவன் அடைந்த பரிதாபமான முடிவையும் எண்ணிப்பார்த் தான். அந்தச் சிந்தனை அவன் மனதைச் கலக்கிவிட்டது. அங்கே திராட்சைத் தோட்டச் சொந்தக்காரன் ஒருவன் வீட்டில் தன் குடும்பத்தோடு மனைவி மக்களோடு கவர்ச்சி கரமான வாழ்க்கை நடத்திவந்தான். -

யாராவது ஒருவர் இங்கர்சாலைப் பற்றி நினைப்பார் களானல், அவன் கொள்கைகள் எப்படியிருந்தாலும் நல்ல நண்பர், யோக்கியமானவன், எதிரிகளைப் பேச்சுவன்மையால் திணர அடிப்பவன்; உண்மை, விடுதலை, நேர்மை நீதி ஆகிய வைகளையே வணங்கி வந்தான் என்று சொல்வார்கள். ஒரு நாள் இவருடைய அருமை நண்பனை பீசர் என்பவனுக்கு ஒரு உலக உருண்டையைக் காட்டி, “இதை யார் படைத்தது? கடவுளா படைத்தான்’ என்ற பொருளில் கேட்டான், “ஓ! இதை யாரும் செய்யவில்லை; உண்டானது” என்றான் பீசர். சொற்பொழிவாளன் என்ற முறையில் மிக உயர்ந்த வியப் பான இடத்தைப் பெற்றிருந்தான் இங்கர்சால்.

கொட்டும் பணியிலும், பெய்யும் மழையிலும் இவனுடைய சொற்பொழிவைக் கேட்கத்திரளாகக் கூடிவிடுவார்கள்மக்கள்,