பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 - உலகைத் திருத்திய

அந்தப் பேராற்றல் மிகுந்த பேச்சின் மூலம் இவன் சம்பாதித்த தொகை, அமெரிக்க ஜனதிபதியின் ஊதியத்தைவிட இரண்டு மடங்கு என்கிறார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே இங்கர்சால் இந்த அரங்கத்தில் பேசப்போகிருன் என்று விளம் பரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவன் இப்படிப் பேசத் தொடங்கிய இருபத்தியைந்து ஆண்டுகளிலே இருபது சொற். பொழிவுகளில் இவ்வளவு தொகை வந்திருக்கிறது. அவன் எப்போதும் தான் ஈட்டிய பெருந்தொகையைப் பற்றிக் கவலைப்பட்டதேயில்லை. கேட்டவர்களுக்கெல்லாம் உதவி செய்தான். தன் பிள்ளைகள் எவ்வளவு சுதந்திரமாக கட்டுப் பாடில்லாமல் விளையாட முடியுமோ அவ்வளவு சுதந்திரமாக விளையாடவிட்டான். வாழ்வை மிகவும் இன்பமாக நடத்தினன். அவனுடைய கருத்துக்களே படித்தவர்கள், நேராகக் கேட்டவர் மறுப்பு சொல்ல முடியாமல் மெளனமாக இருந்தனர். அவ ளுேடு சொற்போர் புரிவதென்பது அவ்வளவு எளிதல்ல. அவ னுடைய ரசிகர்கள் அவனை ஷேக்ஸ்பியருக்குச் சமமாக வைத்துப் பேசினர்கள், -

அவனுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய எட்வர்ட் &mifiqair of); (Edwar Gardin Smith) argrugui Gosform&D உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுகிறார், கிருஸ்துவ உலகம் அவனே, மிக அசிங்கமான சீர்திருத்தவாதி, பகுத்தறிவு வாதி, நாத்திகன் என்றுதான் தூாத்திலிருந்து துாற்ற முடிந்ததே தவிர வாதத்தில் நெருங்கமுடியவில்லை. -

அவன் எண்ணமெல்லாம், மனித இனம் மடமையில் ஆழ்ந்துவிடாமல் நீதியாக, நேர்மையாக இயற்கையும் விஞ்ஞானமும் நம்கண் முன்னல் நிரூபிக்கக்கூடிய பொருள்களே பற்றியதே அன்றி வேறில்லை என்ற பாணியில் அவன் பேச்சும் எழுத்தும் இருந்தன. யார் துணிந்து முன்வந்து, “இங்கர்சாலை நம்யாதீர்கள். அவன் எல்லோரையும் யோக்கியர்களாக, நல்ல வர்களாக, அறிவுள்ளவர்களாக, சிந்தனையோட்டம் உள்ளவர் களாக, நிரூபிக்கக் கூடியதை ஒப்புக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டுமென்கிருன். அவற்றை நம்பாதீர்கள். அயோக்