பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 உலகைத் திருத்திய

இல்லாமலே சிறையில் வாடி செத்தவர்கள் எவ்வளவு பேர். ஒரு ஏழை, மதத்தலைவர்களின் பேச்சை நம்ப இவ்வுலக இன்பங்களிலிருந்து, எவ்வளவு தூரம் ஒதுக்கி வைக்கப்பட் டான் என்பதையும், தைரியமாக முன்வந்து ஆண்டவனே சந்திக்கிழுத்தபோது, எந்த ஆண்டவனவது அவன் முன்னல் தோன்றி என்னை இல்லையென்று சொன்னயாமே! உனக்கு என்ன தைரியம்’ என்று இந்த உலகத்தில் யாரையாவது எப்போதாவது கேட்டிருக்கிருளு. ஆண்டவன் ஒருவருடைய கண்களுக்குத் தெரிவான் என்றால், மற்றவர்கள் முன்னல் வர கூக்சப்படுவானேன். காணுத ஒன்றைப் பயமில்லாமல் நான் காணவில்லை என்று சொன்னவனுக்கு, கடவுளைக் கொண்டு வந்து காட்டுவதுதான் யோக்கியபொறுப்பே தவிர, சிறையின் கதவுகளை திறந்துவிட்டு, கைகளில் விலங்கிட்டு உள்ளே தள்ளுவதுதான் கருணை என்றால், உண்மையான கருணை யாரி டத்தில், கடவுளிடத்திலா, இந்த கன்னியவான்களிடத்திலா என்றெல்லாம் கேட்டு. மதப்புரட்டுகளைத் தன் அறிவு எனும் சம்மட்டியால் அடித்து சுக்குநூருக உடைத்த இராபர்ட் இங்கர்சாலைப் பற்றியது.

அவன் மூல முடுக்குகளில் உட்கார்ந்து எந்த மதவாதியின் காதுக்கும் எட்டாமல் சொல்லவில்லை. ஊரறிய சொன்னன்; உலகறிய சொன்னன். மடாலயங்கள் மன்னர் மாளிகையின் சுவர்களில் எதிரொலிக்கச் சொன்னன். அவர்களை எதிரில் உட்கார வைத்துக்கொண்டே சொன்னன். அந்த மதவாதி களுக்கு இவனுடைய ஆணித்தரமான விவாதத்தை இலவச மாகச் சொல்லவில்லை. பணம் பெற்றுக்கொண்டு சொன்னன். அப்படி வாங்கிய பணம் எவ்வளவு? அமெரிக்க குடியரசுத் தலைவர் வாங்கும் ஊதியத்தைப் போல் இரண்டு பங்கு பணம் சம்பாதித்தார். அவர் இன்ன தீவில், இந்த அரங்கத்தில் பேசப் போகிறார் என்று இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்படும். விழுந்தடித்து டிக்கட்டுகனை வாங்கி விடுவார்கள். பேசுவது யார். கடவுள் இல்லை என்பவர். டிக் கட்டுகளை விழுந்தடித்துக் கொண்டு வாங்கியவர்கள் யார்,