214 உலகைத் திருத்திய
ஒன்றாகவோ எதையும் மறைத்து வைக்கக் கூடாது. எவன் மறு உலகத்தை காட்டுகிறேன் என்று தட்சணை என்ற பெயரால் லஞ்சம் வாங்குகின்றானே, அவன் மனித இனத்தின் கொடிய பகைவன். ஒவ்வொரு மனிதனும் தன் சிந்தனையை ஆய்வுக் கூடமாக்கிக் கொள்ளவேண்டும்.
இறந்துவிட்டவர்கள் சொன்னர்கள் என்பதற்காக நம்பு வதோ, இருக்கிறவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மறுப் பதோ இல்லாமல், உண்மையை நாடுங்கள். மனித இனத் தின் ஒவ்வொரு பகுதியும் உண்மையை நாடிச் செல்கின்றன. உதாரணமாக அரசியல்வாதி வரலாற்றைப் படிக்கிருன், பல நாடுகளின் அமைப்பை சேகரிக்கிருன். மண்வள ஆராய்ச்சி யாளன் மண்ணைத் தோண்டி, பாறைகளை உடைத்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிருன். கடலில் போகிருன் பலவிடங்களைச் சோதிக்கிருன். உண்மையைக் கண்டு பிடிக்கிருன். விஞ்ஞானி பல ஆராய்ச்சிகள் செய்து புதிய பொருளின் உண்மையைக் கண்டுபிடிக்கிருன். மருத் துவன் பல பொருள்களை மோதவிட்டு அதிலிருந்து என்ன மருந்து என்று கண்டுபிடிக்கிருன் இறுதியில் ஒரு உண்மை யைக் கண்டுபிடித்துப் பலரறிய உலகுக்கு அறிவிக்கிரு:ன். மெகானிக்குகள் யந்திரங்களின் தன்மையைக் கண்டுபிடிக் கிறார்கள். பல பொருள்களின் இயக்கங்கள் மூலம் ஒரு யந்திரத்தையே கண்டுபிடித்து உலக நன்மைக்கு வழங்கு கிருன். அவர்கள் எல்லாம் இறந்தவர்கள் சொன்னதையோ, இருப்பவர்கள் “ஆம்” என்று சாதிப்பதையோ நம்பவில்லை. அவர்கள் அறிவை, திறமையை, முயற்சியை நம்பினர்கள். உண்மையைக் கண்டுபிடித்தார்கள். யார் இவற்றையெல்லாம் பொய்யென்று சாதிக்கிறார்களோ, அவர்கள் மனித இனத்தில் விரோதிகள், சிந்திக்கத் தடுப்பவர்கள், அயோக்கியர்கள். எந்த மனிதனின் முயற்சி, யாரால் இந்த உலகம் ஒளிபெற்றது என்பதை ஒப்புக்கொண்டு, அந்த ஒளியிலேயே நின்று கொண்டு. இதுவெல்லாம் பொய் என்றால் எப்படி ஒப்புக் கொள்வது.