பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 உலகைத் திருத்திய

உயிரை மூடத்தனத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் பலியிட வேண்டாம்.

அவர்கள் சொல்வதெல்லாம் பயத்தைப் படியுங்கள். படியுங்கள்; இல்லையாளுல் நாசமாக்கப்படுவீர்கள்: சொல்வதை நம்புங்கள். அப்போதுதான் உங்களுக்கு அருள் கிடைக்கும், இல்லையானல் நாசந்தான். ஒரு நீதிபதியை சரியான தீர்ப்பு சொல்லாமலிருக்கவும், குற்றவாளியை விடுவிக்கவும் லஞ்சம் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். இருக்கின்ற சாட்சிகள் வாக்குமூலப்படி நீதி வழங்குவாரே தவிர, லஞ்சம் வாங்கிக்கொண்டு முறை தவறி நீதி வழங்க முடியுமா. அப்போது சாட்சிகள்தான் நம் கண்களுக்கு தெரியுமே தவிர அவர் வாங்கிய லஞ்சம் கண்களுக்குத் தெரியுமா?

ஒருவேளை நான் பூமியின் மத்தியிலே நூறு மைல் சுற்றள வுக்குக் கீழே வைரம் இருக்கிறது. அதற்காக எனக்கு பத்தா யிரம் டாலர் கொடுங்கள் என்று கேட்டால் யார் தருவார்கள். யோக்கியமானவர்கள் இளும் கேட்க மாட்டார்கள். காரணம் கேட்டார்கள். -

சமய சித்தாந்தம் (Theology) என்பதே ஒரு அயோக்கியத் தனமான விஞ்ஞானம்.

முடிவாக நாம் யோக்கியர்களாய் இருப்போம். நாம் எண்ணத்தின் வேகத்தை உணர்வோம். கல்வி, குழந்தையின் தொட்டிலிலிருந்து தொடரட்டும். தாயின் மடியிலிருந்து தொடங்கட்டும். ஆசிரியரும் தாயும் நல்லவர்களாக இருக் கட்டும். ஒவ்வொரு குழந்தையும் சந்தேகத்தைக் கேட்கட்டும், ஆராயட்டும்; காரணங்களைக் கேட்கட்டும்; கல்வியின் நோக்கமே ஐயப்பாடுகளை முன் வைக்கட்டும்; அவர்கள் மூளை வளர்வதற்கான உதவியை கல்வி செய்யட்டும்; எதுவுமே பரிசுத்தமானதல்ல; போற்றத்தகுந்ததல்ல: அ றி வுக் கு எட்டாத எதுவுமே ஒப்புக்கொள்ளத் தேவையில்லை.

இயற்கையின் கதவுகள் எல்லோருக்கும் திறந்திருக் கின்றன. சிந்தியுங்கள். . .

. முற்றும்