பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

21


“விருப்பு என்பது நரகத்துக்கு விரைவாக இட்டுச் செல்லும் கப்பலின் பாய்மரச் சீலை. கோபமே அதை உந்தும் காற்று; பேராசையே அதனைச் செலுத்தும் சுக்கான்.

ஆத்மா: பொன், மண்ணில் கலந்து சுரங்கத்தில் கிடப்பது போல ஆத்மா முதலில் மிகுதியாகவோ ஓரளவுக்கோ அசுத்தமானதாகவே இருக்கிறது. ஆனால் தவம், தியானம் நற்கொள்கை, நல்லறிவு, நல்லொழுக்கம் இவைகளை மேற்கொள்வதால் அசுத்தம் கலந்த பொன் உருகி தங்கமாவது போல் ஆத்மா பரிசுத்தமாகிறது.

நம் கையில் ஒன்றுமில்லை, விதிதான் நம்மை ஆட்டி வைக்கிறது என்ற வாதம் பொய்யானது.

உலகம் என்று ஒன்றிருக்கிறது என்று நம்புங்கள். மாயாவாதிகள் அது வெறும் மாயை என்று சொல்வதை நம்பாதீர்கள். ஜீவன், அஜீவன் இரண்டுமே உண்டு. தருமம், அதருமம் உண்டு. ஆனால் அவை நம்மை வெவ்வேறு வழிக்கு இட்டுச் செல்லும் என்பதை நம்புங்கள். தன் முயற்சியினால்தான் மனிதன் நிறைவு எய்த முடியும் என்பதை நம்புங்கள்.

பிரமசரியம் என்றால் சதிபதிகள் பரஸ்பரம் நெறி தவறாமல் நேர்மையாக நடந்து கொள்ளுதல் ஆகும்.

பெருவெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது இடையில் ஒரு திட்டு அழியாமல் இருந்து அடைக்கலம் அளிப்பது போல், நல்லவர்கள் துன்புற்ற ஜீவன்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.

மகாவீரரின் உபதேசங்கள் நூற்றுக்கணக்கான சீடர்களால் நாடெங்கும் பரவியது. அரசர்கள், பிரபுக்கள், குறுநில வேந்தர்கள் யாவரும் அம்மதத்தைப் பின்பற்றியதால் அரச அதிகார செல்வாக்குடன் அம் மதம் விரிந்தது. அப்படி வளர்த்த மதம் பிற்காலத்தில் அருகிக் குறுகியதற்குக் காரணம் பலவாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்: அம்மதத்தின் கோட்பாடுகள் பாமர மக்களினால் ஏற்று ஒழுக முடியாதபடி கடுமையாக இருப்பதையும், இல்வாழ்க்கை மேற்கொண்டு