பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உலக

வாழ விரும்பும் மக்கள், முழுத் துறவு நிலையை விரும்பாததாலும், அம்மதத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட இந்து மதத்தில் போதகர்கள் அதிகமாகி, அற்புதங்கள் என்ற பாமர மக்களை ஈர்க்கும் காரியங்களின் மூலமாக இந்து மதக் கொள்கைகளைப் பரப்பினார்கள். அத்துடன் பல நூற்றாண்டுகள் வளர்ந்த ஜைன மதத்தில் இடைச் செறுகல்கள் ஒழுக்க இழுக்கங்கள் தோன்றியிருக்கலாம்.

எப்படியும் ஜைனர்கள் ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்துத் தம் மதத்தைத் துவக்கி, அது பல்லாயிரக்கணக்கான மக்களால் தழுவப்பட்டு வாழ்ந்திருக்கிறது.

ஜைனர்கள் தம் மதத்தில் சேர வருகிறவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களைப் பற்றி, தமிழ் நூல் சிந்தாமணியில் கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது.

“ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின் மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப் பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச் செய்தவம் நுனித்த சீலக் கனைகதிர்த் திங்கள் ஒப்பார்”

(சிந்தாமணி-2834)

கீழ்க்காணும் சித்திரம் ஜைன மதத் தத்துவத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்கு ‘சுவஸ்திகம்’ என்று பெயர். பிறவிச் சக்கரம் என்று கூறப்படும். உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி தேவகதி, விலங்குகதி, நரகதி, மனித கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.

பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அதாவது நன்ஞானம், நற்