பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

25

எழுதியதாக வரலாறு இருக்கிறது. அக்கடிதத்தில் தன் மகனை சந்தோஷிக்கச் செய்வதற்காக கிரேக்க நாட்டிலிருந்து உயர்ந்த மதுபானங்களையும், நடன சிங்காரிகளையும், தத்துவ ஆசிரியர்களையும் அனுப்பித் தருமாறு வேண்டியிருக்கிறான். அதற்கு கிரேக்க நாட்டிவிருந்து வந்த பதிவில், ‘தங்கள் விருப்பப்படி, உயர்ந்த மதுப்பொருள்களையும் நடனமாதர்களையும் அனுப்புகிறோம். ஆனால் கிரேக்க நாட்டு தத்துவபோதகர்களை வெளியில் அனுப்ப கிரேக்கம் தயாராக இல்லை” என்று வரையப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இசை, நடன நிகழ்ச்சிகளிலே மூழ்கி இன்ப சல்லாபங்களிலே தன் மகன் திளைக்க வேண்டுமென்றும், உலகக் கவலையே அவன் மனதில் திரையிடக் கூடாதென்றும் சுத்தோதனன் முயன்றும், சித்தார்த்தனின் மனம் அவற்றில் திருப்தியடையவில்லை. வெளியுலகைக் காண ஆவல் பிறந்நது. ஒரு சமயம் அந்தக் கட்டுக்காவலை மீறி வெளியே கிளம்பி நகரை வலம் வந்த சித்தார்த்தன், நகர வீதிகளில் அதுவரை அவன் அறிந்திராத காட்சிகளைக் கண்டான். முதுமை அடைந்த முதியவர்கள் கோலூன்றி நடக்கும் நிலையைக் கண்டு, மனித ஜீவிதத்தில் முதுமை எல்லோர்க்கும் உரியது என்பதை அறிந்தான். மற்றாெரு சமயம் நோயுற்ற மனிதர்களையும், பிறிதொரு நேரம் இறந்த மனிதர்களைச் சுமந்து செல்லும் காட்சிகளையும் கண்டு, பிணி, மூப்பு, சாக்காடு என்பவை மனிதனுடன் பிறந்தவை என்பதை உணர்ந்தான்.

ஒருநாள் வீதியில் வரும்போது மனதிற்கு அமைதியைத் தரும் அருள் வடிவமாக நின்றுகொண்டிருந்த ஒரு துறவியைக் கண்டான் சித்தார்த்தன். அருள் வடிவாய் நின்ற அப்பெரியவரின் பார்வையின் தீட்சண்யம் சித்தார்த்தனின். மனதில் ஊடுருவிப் பாய்ந்த மாத்திரத்தில், உலகில் துக்கங்களையும், துயரங்களையும் வெல்லும் வழி துறவு நிலையில் எய்தலாம் என்ற முடிவிற்கு வந்தான்.

சித்தார்த்தனின் ஒதுங்கி வாழும் தன்மையைக் கண்டு அஞ்சிய மன்னன், அவனுக்கு மணமுடித்து லெளகிக வழியில்

பூ-102 உ.-2