பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

உலக

விவாதங்களில் மக்கள் ஆர்வம் உள்ளவர்களாகவும், எந்த மதக் கொள்கையையும் வாதித்துப் பேசும் சுதந்திரம் பெற்றவர்களாகவும் இருந்தனர். தங்கள் தேவைகளுக்கேற்ப மனிதர்கள் விரும்பியபடியெல்லாம் கடவுள்களை உருவாக்கிக் கொண்டார்கள். அற்புதங்கள் நிகழ்த்தி ஆதரவு தேடுவது ஒரு மவுசாக அப்போது இருந்தது.

தன் உடலை வருத்திப் புழுதியில் அளைந்து, ஊன் உறக்கத்தைத் துறந்து பட்டினி கிடப்பதால் கடவுளைத் திருப்தி செய்யலாம் என்ற தவறாண நம்பிக்கை நிலவியது. கர்ம நியதியை மட்டுமே அறிந்து, தங்கள் பாவங்களுக்கான காரணங்களை அறியமுடியாமல் வாழ்ந்தனர். இதனால் தனி மனித வாழ்வுக்கும் மதத்திற்கும் கடவுளுக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது.

தெய்வ திருப்திக்காகச் செய்யும் கொடிய பாவங்களை புத்தர் வன்மையாகக் கண்டித்தார்.

‘கடவுளைப் பற்றிய எந்தவித அச்சமுமின்றி தன் ஆத்ம விடுதலைக்காக எந்த மனிதனும் முயற்சி செய்யலாம், நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்குப் பிறர்தான் காரணம் என்பது மூடத்தனம்’ என்றார்.

உலகம் பல பேதங்களாக இருப்பதற்குக் காரணம், மக்களின் விகல்பமான காரியங்களேயாகும் என்றும், வேதங்கள் என்ற போலித் தத்துவத்தின் சாயலையும் கடவுளின் பெயரில் நிலவிய மூட நம்பிக்கையையும் அடியோடு அகற்றுவதில் புத்தர் தீவிரம் காட்டினார்.

மனிதன் தன் செயல்களின் மூலமே வாழ்கிறான். ‘என் செயல் என்னுள்ளே இருக்கிறது. என்னுடனேயே பிறப்பது, இருப்பது, அழிவது. இதற்கு வேறு எதுவும் காரணமல்ல.’

‘ஒரு தனித் தத்துவத்தைக் கொண்ட புது மதத்தை உருவாக்குவதில் நான் அக்கறை காட்டமாட்டேன். ஆனால் மக்களின் கடமையுணர்வை போதிப்பதுதான் என் வேலை.