பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உலக


புத்த தத்துவம் இரண்டு பகுதியானது. வாழ்வு துன்பமயமானது என்பதும், அதை நிவர்த்திக்க நேர்மையான வழியைக் கடைப்பிடிப்பதுமாகும். இவைதான் புத்தரின் நான்கு பேருண்மைகளாக விரிகின்றன. முதல் மூன்றும் போதனையின் தத்துவத்தை விளக்குவது, நான்காவது அத்தத்துவ போதனையின் ஒழுக்கவிதி. இதில் ஒன்றில்லாமல் மற்றதை அறிய முடியாது.

இந்த நான்கு நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் “ஓ பிட்சுக்களே; இரண்டு அதி தீவிர நிலையிலும் இருக்கக் கூடாது. அவை எவை? ஆசை, ஆடம்பரம், தாழ்வு, கொச்சை, உதவாக்கரை என்ற கீழ்மட்டம். தன்னைத் துன்புறுத்திக் கொள்வது, துயரை வரவழைத்துத் தாங்குவது என்ற உச்சக் கட்டம். இவற்றிற்கிடையே உள்ள மத்திய நிலையில் இருந்து தான் நீங்கள் புத்த தத்துவங்களை அறிந்து போதிக்க வேண்டும்.”

ததாகதர் (புத்தர்) கடைப்பிடித்த எட்டு படிகள் எவை? நல்லதில் நோக்கம், நல்லதில் நாட்டம், நல்ல பேச்சு, நற்செயல், நல்வாழ்வு, நன்முயற்சி, நற்சிந்தை, நன்மையில் முயற்சி இவைதான் ததாகதர் கொண்ட இடைநிலை.

அவர் கூறிய நான்கு துன்பியல் நிலைகள் எவை?

பிறப்பு ஒரு துன்பம். முதுமைத் துன்பம், நோய்த் துன்பம், சாவுத் துன்பம், கவலைத் துன்பம், அன்பிலாருடன் கூடி வாழ்தலால் துன்பம், அன்புடையாரைப் பிரியும் துன்பம், விரும்புவதை அடைய முடியாதபோது துன்பம், சுருங்கச் சொன்னால் ஐம்புலன்கள் அவாவும் அத்தனையும் துன்பங்களே. மேற்சொன்ன நான்கு வகைத் துன்பங்களுக்கு மாற்று நல்லனவாய் உள்ள எட்டு படிகள்.

உலகில் மூன்று பொருள்களை மனிதன் காண முடியாது. உள் உணர்வு உள்ள அல்லது இல்லாத, அழியாமல் நிலைத்து நிற்கக் கூடியவை, அறியமுடியாத, நித்தியமில்லாத தன்மை