34
உலக
புனித நதியில் நீராடினால் மனிதனின் “பாவங்கள் அழிகின்றன என்று ஒரு பிராமணர் சொன்னதைக் கேட்டு வெகுண்ட புத்தர், “ஓ பிராமணனே, நீர் உடலைத்தான் சுத்தமாக்கும்; உள்ளத்தை அல்ல. உள்ளம் உன் நன்முயற்சியால் சுத்தமாகும். நன் முயற்சி நற் செயலைத் தூண்டும். நற்செயல் நற்பலனைத் தரும். நற் சிந்தனையாளருக்கு எந்த நதியும் ஒன்றுதான்; புனித மானதுதான்” என்றார்.
புத்தர் மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்தியாவில் சக்ரவர்த்தி என்ற பட்டத்தோடு, அகண்ட எல்லைகொண்ட ராஜ்யத்தை ஸ்தாபித்து புகழோடு ஆண்டுவந்த அசோகன் என்ற மன்னன், புத்த தத்துவத்திற்கு அடிமையாகி உலகெங்கும் அதைப் பரப்ப தன் அரசியலைப் பயன்படுத்தினான். தன் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பினான். தர்மம் என்ன என்பதை அவன் சொல்கிறான். “தமக்குக் கீழுள்ளவர்களிடம், பணியாளர்களிடம் தயாளமும், அன்பும், மரியாதைக் குரியவர்களிடம் மதிப்பும், உயிர் வாழ் ஜீவன்களிடத்தில் இரக்கமும் கொள்வது தான் உலகில் உயர்ந்த தர்மம்.”
புத்தர் சொன்ன நிர்வாண நிலை அல்லது பூரண துறவிற்கு வழிகளாக சொல்லப்படுபவை சீலம் அல்லது ஒழுக்கமேயாகும். அகிம்சை, தர்மம், ஈகை, தன்னடக்கம், கீழுள்ளவர்களிடம் தயாளம், மேலானவர்களிடம் மரியாதை, இவைதான் புத்த மதச் சடங்குகள்; நியதிகள்.
“ஊரைவிட்டு ஓடிவிடுவது, நிர்வாணமாகத் திரிவது, தலையை மொட்டை அடித்துக்கொள்வது, முரட்டு உடையை உடுத்துவது, மத குருமார்களுக்குத் தானம் கொடுப்பது, தெய்வத்திற்கு பலி இடுவது, இவையாவும் அறிவழிந்த மனிதனைக் கடைத்தேற்றாது.”
“ஆயிரம் போர்க் களங்களில் வெற்றி கண்ட வீரனைவிட தன்னை வென்றவனே மகாவீரனாவான்.”
“ஆத்ம சுத்தி என்பது ஆசைகளையும் ஐம்புலன்களையும் ஒடுக்கிவிடுவதால் வருவதல்ல. மனதைப் பக்குவப் படுத்த வேண்டும். புலன் உணர்வுகளை தன் வயப்படுத்திப் பழக வேண்டும்.”