பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

35


மனித உள்ளத்தின் உயர்ந்த தன்மை என்பது “பிரக்ஞை” என்ற தன்னுணர்வு. அடுத்த நிலை தியானம். மன ஒருமைப்பாடு. தியானம் என்பதில் நான்குபடி. 1. இன்ப நிலை, தன்னை மறந்து உள் மனதை ஆராய்வது, புலன்களை நிலை நிறுத்துவது. தன்னையே பிரதிபலிப்பது ஆகியவற்றினால் உண்டாகும் இன்ப நிலை. 2. ஆழ்ந்த மன அமைதி, உள் மன ஒடுக்கம். 3. எல்லா பற்றுதலும் பற்றற்ற நிலையும் அகன்று விடுதல், அமிழ்ந்து போதல். 4. தன்னை அறிவது, உயர்ந்த மனச் சாந்தி, இன்ப துன்பமற்ற சூன்யநிலை.

“தன் சுய துக்கத்தில் மனம் செலுத்துபவன் பிறருடைய துன்பங்களை உணர்வதிலிருந்தும், தன் துக்கத்தை வெற்றி கொள்வதிலிருந்தும் தடுக்கப்படுகிறான்.”

“சப்த சமுத்திரத்திற்கடியில் இருந்தாலும், விண்ணோக்கிச் சென்றாலும் உலகின் எந்த மலைக் குகைகளில் ஒண்டினாலும் மனிதா! உன்னை இறப்பு விட்டுவிடாது.”

அக்கால இந்தியாவில் நிலைத்துப் பரவியிருந்த கடவுள் தத்துவத்தை ஆணித்தரமான வாதங்களினால் முறியடித்த முதல் புரட்சி வீரர் புத்தர் எனலாம். ஈஸ்வரன் தான் உலகைப் படைத்தவன் என்ற கொள்கையை அவர் மறுத்தார். ஈஸ்வரன் உலகைப் படைத்தான் என்றால், எல்லா உயிர்களும் அவனுடைய சக்தியில் அடைக்கலமாக வேண்டியதுதானே. குயவன் புனைந்த மண்பாண்டங்கள் போல அவை செயலற்றுக் கிடக்க வேண்டியதுதானே? அப்போது தர்மத்தை ஏன் கடைப்பிடிக்க வேண்டும்? உலகம் ஈசனால் படைக்கப்பட்டதென்றால் துயரம், கலவரம் அல்லது பாவம், தூய்மை, அழுக்கு யாவும் அவனிடமிருந்தே வந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனுக்குப் பின்னே ஒரு காரண சக்தி இருக்கவேண்டும். அவன் தன்னிச்சையுடன் இல்லை என்றாகும். ஆகையால் அந்த நினைப்பை அகற்றுங்கள்.

அடுத்து, பூரணமாய் உள்ள பரம்பொருள் உலகை உருவாக்கியது என்பார்கள். பூரணமாய் உள்ளதென்றால் அது ஒரு