பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

உலக

காரண சக்தியாகாது. விதையிலிருந்து வளர்ந்து கிளைவிட்டுக் கிளம்பும் தாவரங்களைப் போன்றது படைப்பு என்றால், எல்லா காரியங்களும் ஏன் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆகவே அந்தக் கொள்கையும் தவறாகிறது.

மறுபடியும், ‘தான்’ என்ற சுயம்புத்துவம்தான் படைப்பின் மூலம் என்றால், ஏன் ஒருமித்த இதமான படைப்புகளை உருவாக்க முடியவில்லை? துயரத்தில் காரணங்கள் உண்மையானவை; செயலுக்குரியவை. அப்படியென்றால் ‘தான்’ சக்தியின் வேலை என்ன?

அடுத்து, படைப்பவன் ஒருவனுமில்லை, விதி என்ற ஒன்றே எல்லாவற்றிற்கும் காரணமாகிறது என்று வாதிட்டால் ஏன் ஒரு முடிவை நோக்கி குறிக்கோளுடன் நம் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்? விதியின்படி எல்லாம் நடக்கட்டும் என்று இருக்க முடியவில்லையே ஏன்? அதனால் எந்தக் காரியமும் காரணமின்றித் தோன்றுவதில்லை என்றாகிறது. ஆகவே ஈஸ்வரனோ, பூரண சக்தியோ, தான் என்ற சுயம்புத்துவமோ, காரணமற்ற நிமித்தங்களோ படைப்புக்கு மூலமல்ல. அவரவர் செய்கைகளே நல்லவை அல்லவைகளுக்கு மூலமாகின்றன. மனதை ஒட்டாத செயலில்லை. தங்கத்தால் ஆன கோப்பை முழுவதும் தங்கமாகவே இருப்பதுபோல, மனதினால் நிகழும் செயல்கள் மனதின் தன்மையாகவே இருக்கும்.

புத்தர் ‘ஆத்மா’ என்பதைப் பற்றி எந்த இடத்திலும் விளக்கம் சொல்லவில்லை. அசாதாரண ஆத்மாவுக்குமேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை மட்டும் கூறி, அது என்ன என்பதை விவரிக்காமல் இருந்துவிட்டார்.

மனதை ஒருமுகப்படுத்தி ஆராய்ந்தால் காரணத்துவத்தின் சங்கிலித் தொடர்பான செயலை அறிய முடியும்.

அறியாமையை அழித்தால் சமஸ்காரம் என்ற தன்மை அழிகிறது. சம்ஸ்கார அழிவினால் உள்ளுணர்வு மறைகிறது. உள்ளுணர்வு மறைந்தால் நாமரூபம் என்னும் பெயர், உருவம்