பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

உலக

றன. இதுதான் என் விவசாயம். அழிவற்ற தன்மை எனக்கு அறுவடையாகக் கிடக்கிறது.” என்று விளக்குகிறார்.

இப்படி புத்தர் தன் கொள்கைகனை பாமரர்களுக்குப் புரியும் கதைகளாகவும், உதாரணங்கள் மூலமும், உபமானங்கள் வாயிலாகவும் சொல்லி வந்திருக்கிறார்.

வாதத் திறமையினால் வேதாந்திகளின் மூடக் கொள்கைகளை முறியடித்தார். நாடாண்ட மன்னர்களின் மணி முடிகள், அவர் தாமரைப் பாதங்களில் பூசை மலராகத் தூவப்பட்டன.

5000 சீடர் குழுவுடன் தான் அவர் யாத்திரை சென்றிருக்கிறார். அரசர்களும் பிரபுக்களும் வரவேற்று, தோட்டங்களே நந்த வனங்களைத் தோற்றுவித்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

உலக உய்வின் பொருட்டு, தான் கண்ட உண்மையை மக்களிடம் ஊர் ஊராகத் திரிந்து வலியச் சென்று வழங்கிய அம்மகானின் புனிதம், உலகம் உள்ளவரை என்றும் மறையாதிருக்கும்.

“புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி”

அறிவைச் சரணடைவோம்
அறத்தைச் சரணடைவோம்
சான்றாேரைச் சரணடைவோம்.”