பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

உலக


குருநானக் என்பவரால் உருவாக்கப்ப்பட சீக்கிய மதம் கடவுளின் ஒருமைப் பாட்டை வலியுறுத்தியது. ஆரம்பத்திலிருந்து இந்துக்களின் வழக்கங்களை எதிர்த்துத் தனித்த கொள்கையைச் சீக்கியவர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினார். பஞ்சாபில்தான் இம்மதம் தோன்றி வளர்ந்தது.

சீக்கிய மத ஸ்தாபகரான குருநானக் என்பவர் கி. பி. 1469ல் ஏப்ரல்-மே மாதத்தில் தாளவந்தி என்ற இடத்தில் பிறந்தார். அவருடைய தந்தை காலு என்பவர். தாளவந்தியில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். தாய் திரிபா என்பவள். குருநானக் தனது ஐந்தாவது வயதிலேயே தெய்வீக விஷயங்களைப் பேச ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது.

பள்ளிப் பருவத்தில் ஆசிரியரை மிஞ்சும் மாணவனாக விளங்கினாலும், அவருடைய தந்தை நானக்கை பைத்தியம் என்று கருதி, எருமை மாடுகளை மேய்க்கச் சொன்னார். 14-வது வயதில் சுலக்மி என்பவள் மனைவியானாள். உலக விவகாரங்களில் பற்றில்லாமல் மாடுகளை மேய்த்து வந்தார். பிழைப்புக்கான முயற்சி எதுவும் செய்யவில்லை. அவரை குதிரை வியாபாரியாக்க தந்தை செய்த முயற்சியும் பலிக்காமல், குருநானக் எப்போதும் பற்றற்ற உள்ளத்தோடு வாழ்ந்தார். அவருக்கு இரண்டு மகன்கள், ஸ்ரீசந்த், லட்சுமிதாஸ் என்பவர்கள்.

கடவுள் துதிப்பாடல்களைப் புனைவதும், பாடிப் பொழுதைக் கழிப்பதுமாக இருந்த குருநானக் மெய்ஞானம் பெற்ற பின் ‘மனிதர்களில் ஏற்றத்தாழ்வில்லை, இந்து-முஸ்லிம் என்ற பேதமில்லை. கடவுள் ஒன்றே என்ற முழக்கத்தோடு, நான்கு திக்குகளுக்கும் பிரயாணம் செய்து தன் கொள்கையைப் பரப்பினார்.

“சீக்கியர்” என்பது ‘சிஷ்யர்’ என்ற வட சொல்லின் மருவலாகும். இம் மதக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் அணைவரும் சீடர்களாகவும், போதகர்களைக் குருவாகவும் கொள்கிறார்கள். மனிதன் திருவருள் பெறுவதற்குக் குரு அருள்