பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

உலக

பெயர்களே மனதைத் தூய்மைப்படுத்தும். மனிதர்களில் உயர்வுதாழ்வில்லை. தான் என்ற அகந்தை அகல வேண்டும். குருமார்கள் தெய்வ சக்திநிறைந்தவர்கள்-மனிதர்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்துவதும் அவர்களே. வாழ்வை செம்மைப்படுத்துவது குருக்களின் சக்தியே.

நீர் நீரோடு கலப்பதுபோல. இரண்டு ஆறுகள் ஒன்றாகச் சேர்வது போலக் கடவுளின் ஒளிப்பிழம்பில் ஆத்மாக்கள் ஒன்றிவிடுகின்றன.

இம்மதம் பஞ்சாப் மாநிலத்தில் நிலவுகிறது.