பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:Larger-xxx

கிருஸ்து காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆரியர்களின் புராதன பூமியில் தோன்றிய ஒரு தீர்க்கதரிசி யைக் கிரேக்கர்கள் சோரோஸ்டிரிஸ் என்றும் அவருடனிருந்த மக்களை சாதுரஷ்டிரர் என்றும் அழைத்தனர். கிரேக்கர்கள், ரோமானியர்கள், மோசஸ், டேவிட் என்பவர்களை அறியுமுன் னரே சோரோஸ்டிரரை நன்கு தெரிந்திருந்தனர். பழம் நூல் கள் இந்த சோரோஸ்திரர் தெய்வாம்சம் பொருந்தியவர் என்று கூறுகின்றன. அவர் பிறந்த இடம், காலம் சரியாக நிர்ணயிக்க முடியவில்லை. இயேசுவுக்கு முன் 10 வது நூற்றாண்டில் புது போதனைகளைப் பரப்பியவர் சோரோஸ்திரர். அவருடைய நடவடிக்கைகள், பாக்தீரியா, கிழக்கு மீடியாவின் ஈரான், பர்சியா ஆகிய இடங்களில் பரவின. முதுமைப் பிராயத்தில் தன்னுடைய மதத்தைத் ஸ்தாபித்துவிட்ட பிறகு, துராமியான் ஒருவனால் கொல்லப்பட்டு காலமானார். அவருக்கு ஒரு மனைவி, மூன்று மகன்கள், மூன்று மகள்கள், இருந்ததாகக் கூறப்படுகிறது. தனிமையை நாடி மலைகளில் உள்ள கனி, காய்களையும், பால் பொருள்களையும் உண்டு வாழ்ந்தார்.

சிறுவயதிலிருந்தே எதையும், ஏன், எதற்கு எப்படி என்ற வினாக்குறியோடு ஆராயும் சிந்தனையோட்டம் அவருக்கு இருந்திருக்கிறது.

அவருடைய கருத்துக்களில் உள்ள ஆழ்ந்த தத்துவங்கள் தனித்தன்மை வாய்ந்தனவாகவும் அறிவு விளக்கம் தரும்