பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

உலக

வகையிலும் அமைந்திருந்தது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சோரோஸ்திரர் இயற்கையே இறைவன் என்று வழிபட்டார். எப்போதும் “அஹுர மஸ்தா” என்னும் ஒளிமயமான இறைவனையே தேடிக்கொண்டிருப்பதாகக் கூறுவார். தன் மனத்தூய்மை, உயிர்களிடத்து அன்பு, இரக்கம், தயை, ஈகை முதலியவற்றை மனிதர்கள் கடைப் பிடிக்கவேண்டு மென்பார்.

இயேசு கிருஸ்துவிற்கு 10 நூற்றாண்டுகளுக்கு முன்பு, காயவிஷ்டஸ்பன் என்ற ஈரான் அரசன்தான் முதன்முதலில் சோரோஸ்திர மதத்தை ஏற்று, அவனது ராஜ்யத்தில் அதைப் பரப்பினான். அவனுக்குப் பிறகு, அவன் மகள் சையாக்சரஸ் தன் ஆட்சியை விரிவுபடுத்தி ஈரானின் கிழக்குப்பகுதி, பாக்தீரியா ஆகிய இடங்களில் பரப்பினாள்.

சோரோஸ்திரர் உருவ வழிபாட்டை அகற்றினர். ஆயினும் இந்துமதக் கொள்கைகளுக்கும் சோரோஸ்திரர் கருத்துக்களுக்கும், சிலவற்றில் ஒற்றுமை காணப்படுகின்றது. இந்துக்கள் ‘பிரமம்’ என்பதை அக்னி அல்லது நெருப்புக் கோளமாகக் கருதுகின்றனர். சோரோஸ்திரர் “அஹுரேமஸ்தா” என்ற தன் தெய்வத்தை ஒளிப்பிழம்பாகவே சொல்கிறார். இந்து மதம் எட்டு பிரதான கடவுள்களையும், சோரோஸ்திர மதம் ஏழு தெய்வங்களையும் கூறுகிறது. அஹுரமஸ்தா என்ற மெய்ப் பொருள் ஏழு தன்மைகளைப் பெற்றிருக்கிறது. 1. ஒளி, 2. நன்மை, 3. நேர்மை, உரிமை, 4. அதிகாரம், 5. பக்தி 6. மம், 7. அழியாத்தன்மை, சோரோஸ்திரர் லட்சக் கணக்கான பக்திப்பாடல்களையும் கருத்துக்களேயும் எழுதியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஒளியை தெய்வசக்தி என்றும் இருளை தீயசக்தி என்றும் கருதுகிறார்கள்.

முதல் ஆர்தேஷிர் என்ற அரசன் கி.பி. 226-240ல் இந்த சோரோஸ்திர மதத்தைத் தழுவி விக்ரக உருவ வழிபாட்டை அகற்ற, தீவிரமாக நடவடிககை எடுத்தான். சிதறிக்கிடந்த மத நூல்களைச் சேர்த்து வைத்தான். அதற்கு “சேந்த் அவேஸ்தா” என்று பெயர். அதுதான் சோரோஸ்திர மத வேதநூல்.