பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

45

அஹுர மஸ்தா என்னும் அவர்கள் தெய்வத்தின் தன்மை-அஹுரா என்றால் தலைவன், ‘மஸ்’ என்றால் பெரிய ‘தா’ என்றால் அறிவு-பேரறிவு வடிவான தலைவன் என்பதாகக் கொள்கின்றனர். தலையில் தொப்பியும், மேல் உடம்பில் பைகள் உள்ள ‘சாத்ரா’வும், முகத்தின் மேல் ‘பேவனும்’, இடுப்பரையில் நான்கு முடிச்சுகள் உள்ள ‘குஷ்டி’யும் அணிந்து கொள்வார்கள்.

கொடிய, வெறுக்கத் தக்க ஐந்துக்கள், பூச்சிகள், மிருகங்கள் யாவற்றையும் கொன்று, அவற்றின் கெடுதிகளை அகற்றுவது தர்மமாகவும், புனிதக் காரியமாகவும் கருதப்படுகிறது. மனிதன் நிலத்தைச் செப்பனிட்டு, உழுது, பயிர்செய்து வாழ்வதும் அறவழி என்று அவர்கள் வேதம் கூறுகிறது. காலமே வாழ்க்கை, காலத்தை வீணாக்குவது வாழ்வை வீணடிப்பதாகும். உலகில் உள்ள அரியவற்றிலெல்லாம் தலையாயது நேரம்தான். அதை விலை கொடுத்து வாங்க முடியாது.

அவர்கள் மதத்தில் நாய் புனிதமானதாகக் கொண்டாடப்படுகிறது. மனிதனின் பாதுகாவலனாகிய நாய்க்கு, மனிதனுக்கு அடுத்த மரியாதையும், கவுரவமும் அளிக்கிறார்கள். இறந்தவர்களின் சடலம் உள்ள அறைக்கு நாயை அழைத்து வருகிறார்கள். ‘சைதித்’ என்ற சடங்கு நடக்கிறது. ‘நாசு’ என்ற தீய சக்தி சடலத்தை தூக்கிக் கொண்டு நரகத்திற்குச் செல்ல வந்திருப்பதாகவும், இந்த நாயைக் கண்டதும் பயந்து அது ஓடி விடுகிறதாகவும் சொல்கிறார்கள். நாயைக் கொல்வது, மனிதனைக் கொலை செய்வதை விட கொடுமையானது என்பது அவர்கள் கொள்கை. அடுத்து ‘காகம்’, ‘எருது’ புனிதமான வையாகக் கருதப்படுகிறது.

மாத விலக்கான பெண்கள், மரம் செடிகள் உள்ள இடங்களிலிருந்து, மலைப்பாறைக்கு அனுப்பப்பட வேண்டும். நீர் நெருப்பு, நல்லவர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். அவளுக்கு உணவு வெளியே தரவேண்டும். மூன்று நாட்களுக்கு மாமிச உணவு இல்லாமல் எளிய உணவே