பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

உலக

அனுபவங்களையும் குறித்துப் பேசுகின்ற விவாதங்களை உன்னிப்பாகக் கேட்டும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதனால் நாளடைவில் அங்கு நிலவி வந்த யூத மதக் கோட்பாடுகளில், அம்மத குருக்களின் போலித்தன்மையும் ஒரு வெறுப்பு உணர்ச்சியை அவருக்குள்ளே தோற்றுவித்ததால் உண்மை அறியும் வேட்கையோடு வீட்டைவிட்டு வெளியேறினர். ஹீப்ரூ கலந்த சிரியன் மொழிதான் இயேசுவின் தாய் மொழி. பாலஸ்தீனம் முழுவதும் பிரபலமாகியிருந்த ஜான் என்ற இளைஞனின் உணர்ச்சிவேகமுள்ள எண்ணங்களும், அவருடைய தவக்கோலமும் இயேசுவை ஈர்த்ததனால், அவர்பின்னே சென்று பல உண்மைகளைத் தெரிந்துகொண்டார்.

இயேசுவைப் பற்றியும், அவர் வாழ்ந்த கால நிலையையும் அறிய ஐந்து பெரிய தொகுப்புகள் உதவியாகின்றன. முதலாவது சுவிசேஷம் என்னும் கிருஸ்துவ மார்க்க உபதேசங்களும், புதிய ஏற்பாடு என்கிற மதநூல்களும், இரண்டாவது, அபோகிரைஃபி என்று சொல்லப்படும் கட்டுரைகள், மூன்றாவது, பிலோ எழுதியவை. மதவேட்கை கொண்ட மக்களுக்குப் பல கருத்துக்களை வழங்கும் தன்மை ஃபிலோவின் எழுத்துக்களில் காணப்படுகிறது. ஜோசப்பஸ் எழுதியவை சமயவாதத்தன்மை கொண்டவை. தேவபக்தர்கள் விரும்புபவை. யூதர்கள் கொண்டாடும் பழைய ஏற்பாட்டு தொகுப்புநூல் ஆரம்ப முக்கியத்துவம் வாய்ந்தவையாக, அக்கால நிலையைக் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. கடவுளின் ராஜ்யம் என்று கூறும் சொர்க்கத்தைப் பற்றி முதலில் விளக்குவது பழைய ஏற்பாடு.

சுவிசேஷம் என்னும் கிருஸ்துவ மார்க்க உபதேசங்கள் கி.பி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப்பட்டதாகும். அமானுஷ்ய சக்திகளைப் பற்றியும், அற்புத மாயங்களைப் பற்றியும் அதிகம் அவை விவரிக்கின்றன. சுவிசேஷங்களின் அதிகாரங்கள் அவற்றை உபதேசித்தவரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, மத்தேயு, மார்க், லுயூக், ஜான் முதலிய பெயர்களில் உள்ளன. இவற்றில் லுயூக் உபதேசங்கள் என்பன பழைய நூல்களை ஆதாரமாக கொண்டவை.