பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

49

மார்கிக்கின் எழுத்துக்கள் அபோஸ்தலர் பீடரின் வாதங்களை விளக்குகின்றன.

கிருஸ்துவன் என்ற சொல்லிலே எளிமை, மன்னிக்கும் குணம், ஈகை, பரோபகாரம் போன்ற தர்மங்கள் அடங்கியிருப்பதாகக் கூறுவர். “நீ எதை விரும்புகிறாயோ அதையே பிறருக்குச் செய்” என்பதுதான் அடிப்படை.

ஆன்மீக வேட்கையில் அலைந்து பல உரிய உண்மைகளை தனக்குள்ளேயே ஆராய்ந்து தெளிந்த இயேசு, அவற்றை மக்களுக்குச் சொல்ல ஊர் ஊராகச் சுற்றினார். மக்களே பொது இடங்களில் சந்தித்தார்; சொற்பொழிவு செய்தார்.

மோசசின் உபதேசங்களை ஆதாரமாகக் கொண்டு, யூதர்கள் கொண்டாடிய பழைய ஏற்பாடுகளில் உள்ள கருத்துக்களை மறுத்து பல வகையில் இயேசு, மாறுபாடான கருத்துக்களை, மக்களின் அறிவுத் தெளிவுறும் முறையில், புரட்சிகரமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார். பழைய ஏற்பாடுகளில் ‘அடுத்தவனை நேசி’ ஆனால் எதிரியைப் பழிவாங்கு’ என்ற தத்துவம் போதிக்கப்பட்டது. ‘அன்பே அனைத்திற்கும் அடிப்படை’ என்ற கொள்கையுடைய இயேசு அதை மாற்றினார். (மத்தேயு 43-48) ‘அடுத்தவனை நேசி, எதிரிகளைப் பழிவாங்கு என்று சொன்னார்கள். ஆனால் நான் சொல்வேன், உன் எதிரியிடமும் அன்புகாட்டு-நேசி, உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய். உன்னை வெறுப்பவர்களுக்கு உதவி செய். உன்னைத் தூற்றுபவர்களைப் போற்று’ என்கிறார். மனிதன் வெளிக்கு நல்லவனாகத் தெரிந்தாலும், மனத்திலே தீயவனாகிவிடுகிறான். மனத் தூய்மையையே பரமபிதா விரும்புகிறார் என்பார்.

ஒரு சமயம் வீதியில் செல்லும்போது ஒரு இளம் பெண்ணைச் சுற்றிச் சிலர் நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் ஓநாய்களின் மத்தியில் புள்ளிமான்போல மிரண்டு அலறுவதைக் கண்ட இயேசு, அங்கே போய் விசாரித்தார். அவர்கள், ‘பழைய ஏற்பாட்டில் கூறியுள்ளபடி